திங்கள், 23 டிசம்பர், 2019
டிசம்பர் 23,
வரலாற்றில் இன்று.
உலகின் பல விடுதலைப்போராட்ட வரலாற்றிலும், இராணுவ வரலாற்றிலும் என்றும் அழிக்க முடியாத இடத்தை பிடித்த AK 47 தானியங்கித்
துப்பாக்கியின் தந்தை மிக்கெயில் தி. கலாஷ்னிகோவ் (Mikhail Timofeyevich Kalashnikov) நினைவு தினம் இன்று.
மிக்கேயில் தி.கலாஷ்னிகோவ்
(10,நவம்பர் 1919 – 23, டிசம்பர் 2013)
AKM, AK 74 உட்பட பல துப்பாக்கிகள் AK 47ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன. 75 மில்லியன் AK 47 உட்பட மொத்தம் 175 மில்லியன் துப்பாக்கிகள் இன்றுவரை தயாரிக்கப்பட்டுள்ளன.
ஏ.கே 47 இல் ஏ.கே என்பது Automatic Kalashnikov (தானியங்கி கலாஷ்னிகோவ்) என்பதையும் 47 என்பது 1947ம் ஆண்டையும் குறிக்கின்றது.
(படத்தில் 1949 மற்றும் 2009களில்
மிக்கெயில் தி. கலாஷ்னிகோவ்)

டிசம்பர் 23, வரலாற்றில் இன்று.
அய்யா கக்கன் அவர்கள் நினைவு தினம் இன்று.
தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார்.
அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார்.
கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.
உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான்.
ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம்.
நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.
கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது.
கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன்.
இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும்.
ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.
எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார்.
இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.
சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்:
எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’ தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது.
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.
1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார்.
அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார். அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு,
‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார்.
அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் எ

முதல் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த தினம் இன்று.
1954ஆம் ஆண்டில் உலகின் முதல் வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பாஸ்டனிலுள்ள ப்ரிகாம் மருத்துவமனையில் செய்யப்பட்டது.
ஜோசஃப் முர்ரே தலைமையிலான மருத்துவர்கள் குழு இச்சிகிச்சையைச் செய்தது. உடலின் எதிர்ப்புச் சக்தியால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்காக, இரட்டையர்களுக்கிடையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது. ஏனெனில் இதற்கு முந்தைய முயற்சிகளில் உடல் ஏற்காததால், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இருதயம், இரைப்பை, தமனிகள், சிறுநீரகம் முதலான உறுப்புக்களை இறந்தவர்களின் உடலிலிருந்து மாற்றும் சிகிச்சை எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்று முதன்முதலில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சைமன் ஃப்ளெக்ஸ்னர் என்ற அமெரிக்க ஆய்வாளர் சமர்ப்பித்த 'நோயியலின் போக்குகள்' என்ற ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
சோவியத் அறுவை சிகிச்சை நிபுணர் யூரி வோரோனி, 1933இல் இறந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை ஒரு நோயாளிக்குப் பொருத்தினார். ஆனால், அது நோயாளிக்குப் பொருந்தாததால் அவர் இரண்டு நாளில் இறந்தார். 1950 ஜூன் 17 அன்று இல்லினாய்சில் ஒரு 44 வயதுப் பெண்மணிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. ஆனால், உடலின் நோயெதிர்ப்பு செயல்பாடுகள், மாற்றப்பட்ட சிறுநீரகத்தை வெளிப்புறப்பொருள் என்று கருதி நிராகரிப்பதைத் தடுப்பதற்கான மருந்துகள் அக்காலத்தில் இல்லாததால் 10 மாதங்களுக்குப்பின் அந்தச் சிறுநீரகம் செயலிழந்தது.
ஆனாலும் தனது பழுதாகாத மற்றொரு சிறுநீரகத்தின் உதவியுடன் அவர் 5 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். உயிருடன் இருக்கும் ஒருவரிடமிருந்து சிறுநீரகம் பெற்று மாற்றும் சிகிச்சை முதன்முதலாக 1952இல் பாரீசிலுள்ள நெக்கர் மருத்துவமனையில் ஜீன் ஹாம்பர்கர் என்ற மருத்துவரால் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அந்த சிறுநீரகம் 3 வாரத்தில் செயலிழந்தது.
1954 டிசம்பர் 23இல் முர்ரே செய்ததே முழுமையான வெற்றிபெற்ற சிறுநீரக மாற்று சிகிச்சையாகியது. இதற்கும், இதனைத் தொடர்ந்து ஆற்றிய பணிகளுக்கும் 1990இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜோசஃப் முர்ரே-க்கு வழங்கப்பட்டது.

டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று. (1947)
முப்பது வருடங்களுக்கு முன்பு கூட வால்வு ரேடியோக்களை மக்கள் பயன்படுத்தினார்கள். வானத்தில் மிதக்கும் ரேடியோ அலைகளை ஒரு பல்பு மாதிரி இருக்கும் வால்வு உள்வாங்கும். ரேடியோ அலைகளை பாடல்களாக,இசையாக, பேச்சாக மாற்றி ஒலிபரப்பும். அந்தத் தொழில்நுட்பத்தில் தயாரான ரேடியோக்கள் அளவில் பெரியதாக, கனமானதாக, ஒரு ஆளால் தூக்க முடியாமல் இருக்கும்.
டிரான்சிஸ்டர் புரட்சி
அந்தப் பழைய தொழில்நுட்பத்தை காலாவதி ஆக்கிய புது தொழில்நுட்பம்தான் டிரான்சிஸ்டர். அரைச் சாண் உயரமுள்ள வால்வு செய்யக்கூடிய வேலையைவிட அதிகமான வேலையை சின்னஞ்சிறிய டிரான்சிஸ்டர் எனும் கருவி செய்தது. அதன் மூலம் தயாரானதை டிரான்சிஸ்டர் ரேடியோ என கையில் தூக்கிக்கொண்டு கவுரவமாக முன்பு நடப்பார்கள்.பொதுவாக ஒரு டிரான்சிஸ்டர் தனது வழியாக செல்லும் ரேடியோ அலைகள் அல்லது மின்சாரத்தை பல மடங்கு பெருக்கும். அதில் பலவகை உண்டு.
டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டதால் எலக்ட்ரானிக் துறையே தலைகீழாக மாறியது. அதை 1947ஆம் ஆண்டு டிசம்பர் 23இல் அமெரிக்காவில் இருந்த பெல் லேபரட்டரியின் ஆய்வாளர்கள் ஜான் பர்தீன்,வால்டர் கவுசர் பிரிட்டைன், வில்லியம் பிராட்போர்ட் ஷாக்லி ஆகியோர் கண்டுபிடித்தனர். அதற்காக 1956-ல் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ரேடியா மட்டும் அல்ல. முதல் கணினி யும் வால்வுகளால்தான் செய்யப்பட்டது. அந்த முதல் கணினியில் 18 ஆயிரம் வால்வுகள் இருந்தன. 36 ஆயிரம் கிலோ எடையில் ஒரு வீடு அளவுக்குப் பெரியதாக அது இருந்தது. அதை விடப் பல மடங்கு பெரிய இன்றைய கணினிகள்தான் இன்று உங்கள் கைக்கு அடக்கமாக இருக்கும் ஸ்மார்ட் போன்கள். அவை உங்கள் கைக்குள் அடங்கியதற்கு டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டதே காரணம்.
ஐ.சி.யும் புரொசஸரும்
பல்லாயிரக்கணக்கான டிரான்சிஸ்டர்களை உள்ளடக்கி ஐ.சி. எனப்படும் இண்டக்ரட் சர்க்யூட் அடுத்த கட்ட வளர்ச்சியாக பிறந்தது. அதை விட மேம்பட்டவைகளாக இன்றைய புராசஸ்ஸர்கள் வந்து விட்டன.
கணினியில் சி.பி. யூ. என அழைக்கப்படுகிற பெட்டிக்குள்ளே சுகமாக ஒரு மின்விசிறியை தன்மேல் வைத்துக்கொண்டு ஒரு சுகவாசி இருப்பார். அவர்தான் புராசஸ்ஸர். இன்றைய நவீன எலக்ட்ரானிக் கருவிகள் பலவற்றில் பிராசஸ்ஸர்கள் உள்ளன, நவீன செல்போன்களில் உள்ள ஒரு புராசஸ்ஸருக்கு உள்ளே கூட சுமார் 300 கோடி டிரான்சிஸ்டர்கள் உள்ளன. கவனமாய் இருங்கள். பல்லாயிரம் கிலோ எடையில் முன்பு இருந்த பொருள்களை பாக்கெட்டில் வைத்திருக்கிறீர்கள்!

விவசாயிகள் தினம் இன்று.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே,
விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
சரண் சிங் இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 28, 1979 முதல் ஜனவரி 14, 1980 வரை பணியாற்றினார்.
கூட்டுறவு பண்ணைகள் இந்தியாவில் வெற்றி பெறும் என்று சரண் சிங் கருத்து தெரிவித்தார். விவசாயிகள் அனைவரின் உரிமையும் மிக முக்கியம் என்றார்.
சரண் சிங் ஜமின்தாரி ஒழிப்பு முறைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். நிலம் வைத்துள்ள ஜமின்தார்கள் வட்டிக்கு பணம் தருவதை கடுமையாக எதிர்த்தார்.இவரின் ஆட்சியில் வேளான் விளைப்பொருள்களின் சந்தை மசோதாவைக் கொண்டு வந்தார்.
இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த போது நில கையிருப்பு சட்டம் கொணடு வர முக்கிய காரணமாக இருந்தார்.இந்த சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நில கையிருப்பின் உச்ச அளவைக் குறைக்கும் முயற்சியாக இந்த சட்டம் இருந்தது.
தம் வாழ்நாள் முழுவதும் விவசாகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்துவந்தார்.
ஜமின்தாரி முறை ஒழிப்பு,கூட்டுறவு பண்ணை முறை,இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்,வேலை செய்பவர்களுக்கு நிலம் போன்ற நூல்களை எழுதி உள்ளார்.
தில்லியில் உள்ள இவரது நினைவிடத்திற்கு கிசான் காட் பெயரிடப்பட்டுள்ளது. ( ஹிந்தியில் கிசான் என்பது விவசாயியைக் குறிப்பிடும் வார்த்தை).
2001 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா விவசாயிகளின் சார்பாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
விவசாயிகளை ‘தேசத்தின் முதுகெலும்பு’ என்றார் மகாத்மா காந்தி.
இந்தியா ஒரு விவசாய நாடு விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு.
இந்தியாவில் 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்து வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் உலகத்துக்கே உணவளித்தது இந்தியா.இன்றைக்கு மற்ற நாடுகளை நம்பி வாழும் நிலையில் உள்ளது.
விவசாயிகளுக்கு அவர்களின் நிலம்தான் தாய்.அதில் விளையும் பயிர்கள்தான் அவனின்குழந்தைகள் என்றால் மிகையாகது.நிலம் மற்றும் பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மனதளவில், பொருளாதார ரீதியில் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
விவசாயம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக பயிர்களை உற்பத்தி செய்வதையும் கால்நடை வளர்ப்பையும் குறிக்கும்.விவசாயம் ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும்.
உணவுப் பொருட்களின் விலை உச்சத்துக்கு உயர்ந்தும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை.
இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டால் அவன் முன்னை விட அதிகமாக துடிப்பாக விவசாயம் செய்து முடியும்.
விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது.விவசாய நிலங்களை இன்று தொழிற்சாலைகள் ஆக்கிரமித்து வருகிறது.
நீர் ஆதாரங்கள் குறைந்து கொண்டே வருகிறது. நீர் நிலைகளை நிலங்கள் இன்று ஆக்கிரமிப்புகள் செய்துள்ளன.
நதிகள் தொழிற்சாலை கழிவுகளை சுமக்கும் நதிகளாக மாறி இருக்கிறது. ஆறுகள், மணற்கொள்ளை நடக்கும் இடமாக இருக்கிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்னும் குறளின் படி விவசாயிகளை முன்னிலைப்படுத்தாவிடில் வருங்காலத்தில் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஞாயிறு, 22 டிசம்பர், 2019
டிசம்பர் 22 ,
வரலாற்றில் இன்று.
கடலின் கோரத்தாண்டவத்தில் ஒரு ஊரே ஜலசமாதி அடைந்த தினம் இன்று.
55ஆண்டுகளுக்கு முன் 1964இல் நள்ளிரவு 12:10 மணிக்கு புயல் மற்றும் கடலின் கோரத்தாண்டவத்தால் அழிந்து மண்ணோடு மண்ணாக போன அந்த ஊர் தனுஷ்கோடி.
ஆழிப்பேரலைக்குள் மூழ்கி இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழும் தமிழகத்தின் துறைமுக நகரங்களில் ஒன்றான தனுஷ்கோடி,
அழிந்து போன 56ஆம் ஆண்டு துவக்கத்தில் இன்று கால் பதிக்கிறது. இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி.
ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால் இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு.
வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி, இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகதான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல் தான். இங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்றுகூட புயலுக்கு தப்பவில்லை.
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில், ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்துகூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 1,800க்கும் மேற்ப்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டிசம்பர் 22,
வரலாற்றில் இன்று.
சிலம்பொலி செல்லப்பன் பிறந்த தினம் இன்று.
சிலம்பொலி செல்லப்பன் ( டிசம்பர் 22, 1929 - ஏப்ரல் 6, 2019) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர்.
நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் எனும் ஊரில் பிறந்த இவர் கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். சிறந்த பேச்சாளர். உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பணிகளையாற்றியவர்.
சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன் முதலிய பல நூல்களை எழுதியிருக்கிறார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றிருக்கும் இவர் எழுதிய “சிலம்பொலியாரின் அணிந்துரைகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)