வியாழன், 7 மே, 2020

தமிழ்நாட்டின் தேவைக்கேற்ற நிதி ஆதாரங்களை பெருக்கிட வழியற்று சாராயக்கடைகளை திறந்துவிட்டும், மத்தியஅரசிடம் பெற வேண்டிய நிதிகளைப் பெற தெம்பற்றும், 4.5இலட்சம்கோடி கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு ஓய்வூதியபலன்களை வழங்கிட வகையற்றும், அடுத்து அமையும் மக்கள் அரசுக்கு அதிக செலவுத்தொகையையும், நிதிச்சுமையையும் ஏற்படுத்தும் தீய நோக்குடன் செயல்படுகிறது எடப்பாடியார் அரசு! தமிழ்நாடு சட்டமேலவை முன்னாள் உறுப்பினர் பாவலர்.திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்கள் குற்றச்சாட்டு!



அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கு பயிற்சி...

Public Services ~ Age of superannuation of Government Servants, Teachers, etc.Increased to 59 years-Orders - Issued…

*✳தமிழக அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59ஆக அதிகரிப்பு*

*அரசுப் பள்ளி, கல்லூரிகள், பொது நிறுவன பணியாளர் அனைவருக்கும் பொருந்தும்*

மே 7, வரலாற்றில் இன்று.

சோனி நிறுவனம் தொடங்கிய தினம் இன்று.

 1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற SONY நிறுவனத்தை தொடங்கினார் அக்யோ மொரிட்டா. அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் துளைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் கவனம் செலுத்தினார் மொரிட்டா.
Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் அந்த நிறுவனம் முதன் முதலில் தயாரித்து சந்தைப்படுத்தியது டேப் ரிகார்டர் கருவியாகும். இன்று டெலிவிஷன், DVD பிளேயர், அனைத்துவகை மொபையில் போன்கள், ஒலிபெருக்கி கருவிகள், ப்ரோஜெக்டர்கள், அனைத்துவகை ஆடியோ வீடியோ கருவிகள், ஒலிப்பதிவுக் கருவிகள், கேமராக்கள், கணிணி ஊடகக் கருவிகள் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களையும் தயாரிப்பதில் உலகின் நம்பர் ஒண் நிறுவனமாகத் திகழ்கிறது.
மொரிட்டா தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதன் பெயர்: Made in japan
மே 7, வரலாற்றில் இன்று.

நடிகை ப.கண்ணாம்பா நினைவு தினம் இன்று(1964).
 
மு. கருணாநிதியின் 'மனோகரா' திரைப்படம் மூலம் வசனத்தை திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை பெற்றவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்தும் உள்ளார்.

கண்ணாம்பா தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர். ஆந்திரப் பிரதேசம், குட்டப்பா என்ற ஊரில் எம். வெங்கணராசையா, லோகாம்பா ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். தாயின் பெற்றோருடன் ஏலூருவில் வளர்ந்தார்.

1927-ம் ஆண்டு கண்ணாம்பா 16 வயதில் நாரலா நாடகி சமாஜன் நாடக மன்றத்தில் சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்து பெயர் பெற்றார். அதன் பிறகு அந்த நாடக மன்றம் மேடையேற்றிய அனுஷியா, சாவித்திரி, யசோதா போன்ற நாடகங்களில் நடித்தார்.

இந்நாடக நிர்வாகிகளில் ஒருவரான கே. பி. நாகபூஷணம் 1934-ல் கண்ணாம்பாவைத் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டு இருவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலி என்ற புதிய நாடகக் கம்பனியை ஆரம்பித்து தென்னிந்தியா முழுவதும் நாடகங்களை நடத்தி வந்தார்கள்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் ஒரு ஆண்பிள்ளையும், பெண் பிள்ளையையும் தத்தெடுத்து வளர்த்தார்கள். மகள் ராஜராஜேஸ்வரி பிரபல தெலுங்கு இயக்குனர் சி. புல்லையாவின் மகனைத் திருமணம் செய்து கொண்டார்.

ஸ்டார் கம்பெனியைச் சேர்ந்த ஏ. ராமையா கண்ணாம்பாவை சந்திரமதி பாத்திரத்தில் ஹரிச்சந்திரா திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு சரசுவதி டக்கீஸ் கம்பெனி தயாரித்த துரோமதி படத்தில் நடித்தார்.

1938-ல் பி. என். ரெட்டி தயாரித்த கிரலட்சுமி படத்தில் நடித்தார். கண்ணாம்பா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் (பின்னர் ஜெமினி ஸ்டூடியோவாக மாறியது) ராஜகோபாலின் கிருஷ்ணன் தூது. தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிப் பேசி நடித்தார். இது 1940 ஆண்டு வெளிவந்தது.

அடுத்து அவர் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் அசோக்குமார் படத்தில் நடித்தார். 1941 இல் ஜுப்பிட்டர் பிக்சர்ஸ் தயாரித்த கண்ணகி படத்தில் நடித்தார். கண்ணகிக்குப் பிறகு கண்ணாம்பா தமிழ்நாட்டில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். கலைஞர் மு. கருணாநிதி எழுதிய வசனங்களை மனோகரா திரைப்படத்தில் சிறப்பாக பேசி நடித்தார்.

இவர் 1964ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி காலமானார்.
மே 7, வரலாற்றில் இன்று.

சென்னையில் முதன் முதலாக டிராம் வண்டி இயக்கப்பட்ட தினம் இன்று(1895).
மே 7,
வரலாற்றில் இன்று.


தஞ்சையில் கரந்தை தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்த ‘தமிழவேள்’ உமா மகேஸ்வரன் பிறந்த தினம் இன்று.

தஞ்சாவூர் மாவட்டம் கருந்திட்டைக்குடியில் (1883) பிறந்தார். வல்லம், கும்பகோணத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். சிறு வயதிலேயே பெற்றோர் மறைந்ததால், கரந்தையில் சித்தியிடம் வளர்ந்தார்.

தமிழ், ஆங்கிலத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். புத்தகங்கள் படிப்பதில் நாட்டம் கொண்டவர், பள்ளி நேரம் தவிர எஞ்சிய நேரத்தில் ஏதாவது படித்துக்கொண்டே இருப்பார். தஞ்சை கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.

சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சிறந்த வழக்கறிஞராகப் புகழ்பெற்றார். ஏழைகளுக்கு இலவசமாக வாதாடினார். கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பள்ளிக்கூடம் கட்டுவது, சாலைகள், ஆற்றுப் பாலங்கள் அமைப்பது என பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டார்.

மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட கூட்டுறவு நிலவள வங்கி தொடங்க உதவினார். கூட்டுறவு அச்சகம், கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகத்தை தொடங்கினார். 1911இல் கரந்தை தமிழ்ச் சங்கத்தை ஆரம்பித்து, அதன் முதல் தலைவராகப் பணியாற்றினார். 30 ஆண்டுகாலம் அதைக் கட்டிக்காத்தார்.

அங்கு ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட தமிழ்ச்சங்க நூல் நிலையம் இவரது முயற்சியால் உருவானது. தொழிற்கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர், இச்சங்கம் சார்பில் செந்தமிழ் கைத்தொழில் கல்லூரியைத் தொடங்கினார். சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவமனை தொடங்கப்பட்டது.

‘தமிழ்ப்பொழில்’ என்ற மாத இதழையும் தொடங்கினார். அதில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள், கவிதைகள், தமிழ்க் கலைச் சொல்லாக்கங்கள், வரலாற்றுப் படைப்புகள் ஆகியவை இடம்பெற்றன. பல அரிய தமிழ் நூல்களை வெளியிட்டார். இலவச நூலகம் அமைத்தார்.

சொற்பொழிவுகள், சொற்போர்கள், நூல் வெளியீடு, நூல் ஆராய்ச்சிகள், இலக்கண, இலக்கிய அறிவு நூல்களையும், பிறமொழியில் உள்ள சிறந்த நூல்களையும் தமிழில் வெளியிடுவது, உடற்பயிற்சி கூடங்கள் நடத்துவது என பல வகையிலும் சமூகத்துக்கு சேவையாற்றினார்.

மனோன்மணீயம் சுந்தரனாரின் ‘நீராரும் கடலுடுத்த’ பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்தது இவர்தான். தமிழுக்காக தனியே பல்கலைக்கழகம் வேண்டும் என்று குரல் கொடுத்தார். இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடினார். நல்ல பேச்சாளர், எழுத்தாளரான இவர் தனது கருத்துகளை சொற்பொழிவுகள், கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார்.

பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்க வலியுறுத்தினார். தனது தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக, தமிழ் ஆசிரியரையே நியமித்தார். யாழ்நூல், தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தார். சென்னை மாகாண அரசு இவருக்கு ‘ராவ்பகதூர்’ பட்டம் வழங்கியது. செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றார்.

தனது கரந்தை தமிழ்ச் சங்கம், தாகூரின் சாந்தி நிகேதனுக்கு சமமாக விளங்கவேண்டும் என ஆசைப்பட்டவர், கல்கத்தா சென்று சாந்தி நிகேதனைப் பார்வையிட்டார். காசி இந்து பல்கலைக்
கழகத்தையும் பார்வையிட்டார். சென்ற இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அயோத்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தமிழ்ப் பணியையும், சமூகப் பணியையும் இறுதிவரை மேற்கொண்ட ‘தமிழவேள்’ உமா மகேஸ்வரன், மருத்துவமனையிலேயே 1941 மே 9ஆம் தேதி 58ஆவது வயதில் காலமானார்.
மே 7, வரலாற்றில் இன்று.

ராபர்ட் கால்டுவெல் பிறந்த தினம் இன்று(1814).

கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையது.

1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே.

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப்
படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெரும் பேறாக "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட இராபர்ட் எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்
நற்கருணை தியான மாலை (1853)
தாமரைத் தடாகம் (1871)
ஞான ஸ்நானம் (கட்டுரை)
நற்கருணை (கட்டுரை)
பரதகண்ட புராதனம்.
மே 7,
வரலாற்றில் இன்று.

ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் இன்று.


ரவீந்திரநாத் தாகூர்
1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாள் கல்கத்தாவில் உள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். குடும்பத்தில் பதினான்காவது பிள்ளை அவர். பெற்றோர் வசதி மிக்கவர் என்பதால் அனைவரும் செல்வ செழிப்பில் வளர்ந்தனர். இளம் பருவத்திலிருந்தே இலக்கியம், இசை, சமயம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டினார் தாகூர். வேதங்களையும் உபநிடதங்களையும் ஆர்வத்துடன் கற்றார்.

மொழியாற்றல் அவருக்கு இயற்கையாகவே இருந்தது. எனவே பனிரெண்டாவது வயதிலேயே கவிதைகள் புனையத் தொடங்கினார். தாகூரின் குடும்பம் வெளியிட்டு வந்த பாரதி என்ற பத்திரிகையில் அவரது ஆரம்பகால படைப்புகள் இடம்பெற்றன. கவிதைகள் எழுதிய அதே நேரத்தில் வங்காள நாட்டுப்புறப் பாடல்களை பாரம்பரிய இசையோடு கலந்து இசைத்தொகுப்பாகவும் வெளியிட்டார்.

பிற்காலத்தில் அது 'இரவீந்தர சங்கீதம்' என்று அழைக்கப்பட்டது.தாகூர் முறையாக பள்ளி செல்லவில்லை அதற்கு காரணம் பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாடுகளிலும், சட்ட திட்டங்களிலும் அவருக்கு உடன்பாடு கிடையாது என்பதுதான்.

கல்வியாக இருந்தாலும் சரி, கவிதையாக இருந்தாலும் சரி, இசையாக இருந்தாலும் சரி எதிலுமே சுதந்திரத்தை விரும்பியவர் அவர். பள்ளிக்கு செல்லாவிட்டாலும் சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் ஆகியவற்றில் வல்லவராக இருந்தார். தனிமையையும் கவிதையையும் விரும்பிப் போற்றிய தாகூர் தனது மிகச்சிறந்த படைப்புகளை தனிமையின் இனிமையில்தான் எழுதினார்.

அவரது இலக்கிய பணி சுமார் அறுபது ஆண்டுகள் நீடித்தது. அந்தக்கால கட்டத்தில் அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், இருபத்தைந்து நாடகங்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள் என எழுதிக் குவித்தார்.
இலக்கியம், ஆன்மீகம், சமூகம், அரசியல் ஆகியவைப் பற்றி விழிப்புணர்வூட்டும் பல கட்டுரைகளையும் அவர் எழுதினார். இவையெல்லாம் தவிர்த்து அவருக்கு ஓவியம் வரையவும் நேரம் இருந்தது.

சிறு வயதிலிருந்தே பள்ளிக்கூட பாடதிட்டங்களையும், ஆசிரியர் கற்பிக்கும் முறைகளையும் விரும்பாத தாகூர் அந்தக்கால குருகுல முறைப்படி ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கி அதில் நன்முறையில் கல்வி கற்பிக்க விரும்பினார். அதன் பயனாக அவர் 1901ஆம் ஆண்டு தோற்றுவித்த ஒரு கலைக்கூடம்தான் சாந்தி நிகேதன்.
தன் செல்வத்தையும், எழுத்து மூலம்  ஈட்டிய பொருளையும் அந்தக் கல்வி நிலையத்திற்காக செலவிட்டார். அந்த கல்விக்கழகத்தில் மொழிகளும்,
கலைகளும் இயற்கைச் சூழலில் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கேயே தங்கி கற்பித்தனர், கற்றனர்.
இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள் சாந்தி நிகேதனில் கல்வி கற்றனர்.

 காந்தியடிகள் அந்தக் கல்வி நிலையத்திற்கு வருகை புரிந்தார். ஜவஹர்லால் நேரு அந்தக் கல்வி நிலையத்தின் மீது அதிக அக்கறை காட்டினார். இந்தியாவின் முன்னால் பிரதமர் இந்திராகாந்தி அந்த நிலையத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடதக்கது. சாந்தி நிகேதன் கலைக்கழகம் சிறிது சிறிதாக வளர்ச்சிப் பெற்று பின்னர் 'விஸ்வ பாரதி' பல்கலைக்கழகம் என்றானது. இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் அந்த பல்கலைக்கழத்தில் கல்வி பயில வருகின்றனர்.
இரவீந்தரநாத் தாகூருக்கு அழியாப் புகழை பெற்றுத் தந்தது 103 கவிதைகளின் தொகுப்பாய் அவர் படைத்த அமர காவியமான கீதாஞ்சலிதான். அந்தக் கவிதைகள் உயரிய தத்துவங்களையும், ஆன்மீக
சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.

முதலில் தனது தாய்மொழியான வங்காளத்தில் எழுதியதுடன், பின்னர் தாமே அவற்றை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தார் தாகூர். 1912ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலியை உலகம் ஆங்கிலத்தில் படித்து வியந்தது. அதற்கு அடுத்த ஆண்டே 1913இல் அந்த இலக்கியத்திற்கு நோபல் பரிசை வழங்கி மகிழ்ந்தது நோபல் குழு.

 நோபல் பரிசுத் தொகை தாகூருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதனைக் கொண்டு சாந்தி நிகேதன் கல்வி நிலையத்தின் செலவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினார்.

ஆனால் அவருக்கு ஒரு வருத்தமும் இருந்தது மேல்நாட்டு உலகம் தன் படைப்பைப் பாராட்டிய பிறகுதான் சொந்த நாட்டு மக்களின் பாராட்டும், கவனமும் தன் நூலுக்கு கிடைத்தது என்பது குறித்து வருந்தினார்.
தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை கல்கத்தாவில் உள்ள ஒரு வங்கியில் போட்டு வைத்தார். துரதிஷ்டவசமாக அந்த வங்கி நொடித்துப் போனது.

தாகூரின் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் 1915ஆம் ஆண்டு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது. ஆனால் 1919ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த விருதை திருப்பி அனுப்பி விட்டார் தாகூர். உலகம் போற்றும்  காந்தியடிகளை 'மகாத்மா' என்று முதலில் அழைத்துப் போற்றியவர் தாகூர்தான் என்று வரலாற்றுக் கு