தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்,பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.Mlc.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு இராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் இராசீபுரம் ஒன்றியக்கிளை சார்பாக வழங்கப்பட்டு உள்ளது.
1. இராசீபுரம்
அரசு மருத்துவமனை சித்தா பிரிவுக்கு கபசுர குடிநீருக்கான மூலப்பொருட்கள் சித்தா பிரிவு மருத்துவர் திரு.
ஆர்.மோகனசுந்தரம் அவர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.
2.இராசீபுரம் அரசு மருத்துவமனையில் கொரானா பிரிவுக்கு தடுப்புகள் அமைக்க உபகரணங்கள் மற்றும் ஆயுஷ் குடிநீருக்கான மூலப்பொருட்கள் தலைமை மருத்துவ அலுவலர் திரு. செந்தில் குமார் அவர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிகழ்வில் மாநிலச் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி. இராசீபுரம்ஒன்றிய அமைப்பாளர் திருமதி.வெ.லட்சுமி ,
அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி.சி.குணவதி ,
திருமதி.ந.விஜயலட்சுமி,திருமதி.
இரா.கார்த்தியாயினி ,நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தலைவர் திரு.
சு.சிதம்பரம் ஆகியோரும்,நலத்திட்ட வழங்கும் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நலத் திட்டங்களை வழங்கினர்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாமக்கல் கிழக்குமாவட்டச்செயலாளர் திரு.கே.ஆர்.என்.
இராஜேஸ்குமார் அவர்கள் ,
தி.மு.க.,வின் நாமக்கல் மாவட்ட முன்னாள்
இளைஞரணி துணை அமைப்பாளர் திரு வி.பாலு அவர்கள், தி.மு.க., இராசிபுரம் நகரச் செயலாளர் திரு என்.ஆர்.சங்கர் அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கினர்.