செவ்வாய், 6 அக்டோபர், 2020

கல்வித் தொலைக்காட்சி_ டாக்டர் ஏபிஜெ . அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் 15.10.2020 அன்று நிகழ்ச்சிகள் சார்ந்த விவரங்கள் அனுப்புதல் தொடர்பான கல்வித் தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அவர்களின் செயல்முறைகள். நாள் .05.10.2020.

கல்வித் தொலைக்காட்சி_ டாக்டர் ஏபிஜெ . அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் 15.10.2020 அன்று நிகழ்ச்சிகள் சார்ந்த விவரங்கள் அனுப்புதல் தொடர்பான கல்வித் தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அவர்களின் செயல்முறைகள். நாள் .05.10.2020.

தொடக்கக் கல்வி - அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

_*தொடக்கக் கல்வி - அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!*_

கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் போக்கு!தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை அடிப்படையில் தமிழக அரசு அவற்றை நிராகரிக்கவேண்டும்!இரட்டை வேடம் - மக்களின் வெறுப்பை அதிகரிக்கவே செய்யும்!-டாக்டர்.கீ.வீரமணி.

கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் போக்கு!

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை அடிப்படையில் தமிழக அரசு அவற்றை நிராகரிக்கவேண்டும்!

இரட்டை வேடம் - மக்களின் வெறுப்பை அதிகரிக்கவே செய்யும்!
----------------------------------------------------

தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழிக் கொள்கை தமிழ், ‘‘இங்கிலீஷ்’’ என்ற இருமொழிக் கொள்கை; இது கடந்த 50 ஆண்டுகளுக்குமேல் நடைமுறையில் உள்ள சட்டப்படியான நிலவரமாகும்.

ஏற்கெனவே ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் தொடரும் என்ற உறுதிமொழியும் மத்திய ஆட்சி மொழிச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக - பிரதமர் மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல், ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கான களமாக தமிழ்நாட்டை ஆக்கி வரும் முயற்சிகள் தொடர் முயற்சிகளாக மேற்பட்டுவருவதும், அந்தத் திணிப்பின் காரணமாக கடும் எதிர்ப்பையும், வெறுப்பையும் மத்திய அரசின்மீது பெருக்கி வருகிறது.

இதில் அரசியல் கண்ணோட்டம் இல்லை; மாறாக மொழி உணர்வும், எந்த மொழி திணிக்கப்பட்டாலும் எதிர்க்கும் மக்களின் மனப்பாங்கும் இயல்பானவை மட்டுமல்ல; பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கும் உணர்ச்சிபூர்வமான ஒன்று.

தமிழ்நாட்டு ஹிந்தி எதிர்ப்புக்கு 80 ஆண்டுகால வரலாறு உண்டு

தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு என்பது 80 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு என்பதை ஏனோ டில்லி ஆட்சியாளர் மறந்து, இந்த நெருப்புடன் விளையாடும் விபரீத விளையாட்டை ஆடி, தமிழ் மக்களின் உணர்வுக்கு அறைகூவல் விடுகிறார்கள் - இது, தேவையற்ற ஒன்று.

அரசமைப்புச் சட்டம் 22 மொழிகளை அங்கீகரித்துள்ளதை ஏனோ ‘‘வசதியாக’’ மறந்துவிடுகிறார்கள்!
ரயில்வே டிக்கெட்டுகளின் முன்பதிவுச் சீட்டை ஹிந்தியில் அச்சடித்து, அதை குறுஞ்செய்தியாக தமிழ்நாட்டுத் தொடர் வண்டி பயணிகளுக்கு அனுப்புவதும், நாட்டுடைமையாக்கப்பட்ட தேசிய வங்கி ஒன்றில், கங்கைகொண்ட சோழபுரம் கிளையில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் கடன் கேட்டு மனு போட்டதை விசாரிக்கையில், அந்த வங்கியின் மேலாளர் - வடபுலத்தவர் - ‘‘ஹிந்தியில் பேசினால் மட்டுமே தன்னால் பதில் கூற முடியும்‘’ என்று ஆணவமாக பதில் கூறியதும், அதன் விளைவாக பரபரப்பான செய்திக்குப் பிறகு, அவர் திருச்சிக்கு மாற்றப்பட்டதும் வந்த செய்தி அல்லவா; (திருச்சிக்குப் போனால், வணிக முறையில் தமிழ் அவருக்குத் தெரிந்துவிடுமா?) எங்கே பணி புரிகிறாரோ அந்த மண்ணின் மொழி தெரிய வேண்டாமா? அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள்கூட கட்டாயம் அந்தந்த மாநில மொழியைக் கற்கவேண்டும்; தேர்ச்சி பெறவேண்டும்; பேச, எழுத வேண்டும் என்ற சட்டம் அமுலில் இருக்கும்போது, இப்படிப்பட்ட ஹிந்தி அதிகாரிகள் இங்கே இவ்வளவு ஆணவத்துடன் பதில் கூறுவது எந்தப் பின்னணியில்?

அண்ணாவின் இருமொழிக் கொள்கை 
என்னாயிற்று?

தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசு, அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் ஆட்சி மொழிக் கொள்கை என்று கூறும் நிலையில், அதுவே ஹிந்தியில் வினா - விடையை நடத்த அனுமதிப்பதா?

மருத்துவத் துறையில் ஹிந்தி இணைப்பை மத்திய அரசு அனுப்பினால், அதை அப்படியே ஏற்பதா? தமிழ்நாட்டின் கொள்கைப்படி மறு இணைப்பு தமிழில் இருக்கவேண்டாமா?
மாநில அரசு - இரட்டை வேடம் போடுவது - வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் கூறுவது, அதன்மீது மக்களுக்குள்ள எதிர்ப்பைத்தான் நாளும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த உணர்ச்சிபூர்வ பிரச்சினையில் 80 ஆண்டுகால வரலாற்றைக் கூட மறந்துவிட்டு, ஏனோதானே என்று ‘‘பாம்புக்குத் தலை, மீனுக்கு வால்’’ என்ற விலாங்கு அரசியல், பாசாங்கு அரசியல் செய்யக்கூடாது.
மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, இரயில்வேயிலும் மற்றும் பல முயற்சிகளும் தேவையற்ற கிளர்ச்சிகளுக்கு வழிவகுக்கும்; அந்த மத்திய அரசு, தமிழக அரசின் மாநிலக் கொள்கையை மதித்து நடந்து கொள்ளவேண்டும் என்று துணிவுடன் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தவேண்டாமா? வன்மையாகக் கண்டிக்கவேண்டாமா?

மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது என்றால், குட்டக் குட்ட குனிந்து கொண்டே இருப்பதுதானா?

தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன?
‘‘உறவுக்குக் கைகொடுப்போம்; அதேநேரத்தில், உரிமைக்குக் குரல் கொடுப்போம்‘’ என்று கலைஞர் கூறியதை வலியுறுத்திடும் அளவுக்குத் துணிவு வராவிட்டால்கூட பரவாயில்லை; எல்லாவற்றிற்கும் சலாம் போடுவது, இந்திக்கு நடை பாவாடை விரிப்பது - தமிழ்நாட்டின் அரசுக்கு நல்லதல்ல; மத்திய அரசின் ஹிந்தித் திணிப்பை தமிழ்நாடு அரசும் எதிர்த்து நிற்கவேண்டிய தருணம் இது - கடமை வழுவாதீர்! வரலாற்றுப் பழியை சுமக்காதீர்!!

- கி.வீரமணி,
தலைவர், 
திராவிடர் கழகம்.

5.10.2020 
சென்னை

கொரோனா வைரஸ்: பள்ளிகள் மறுதிறப்புக்கு இந்திய அரசு விதிக்கும் 28 கட்டுப்பாடுகள் - மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ்:

 பள்ளிகள் மறுதிறப்புக்கு இந்திய அரசு விதிக்கும் 28 கட்டுப்பாடுகள் - மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கொரோனா வைரஸ் பரவலையொட்டி இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பள்ளிகளைத் திறக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய 28 வழிகாட்டுதல்களை இந்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கல்வித்துறை உயரதிகாரிகளுடன் அத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த வழிகாட்டுதல்கள் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்திய உள்துறை, இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பள்ளிகள் மறு திறப்புக்கான 14 நடவடிக்கைகள் மற்றும் பாடமுறைகள் தொடர்பான 14 நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம்:

பள்ளிகள் மறுதிறப்பு வழிகாட்டுதல்கள்

1) பள்ளிகளின் அனைத்து பகுதிகள், மர நாற்காலிகள், அலமாரிகள், தண்ணீர் தொட்டிகள், வழிவறைகள், சமையல் கூடங்கள், நூலகங்கள் என அனைத்தும் சுத்திகரிப்பான்கள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளரங்கில் காற்றோட்டமான வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

2) அவசரகால பராமரிப்புக்குழு, நடவடிக்கை குழு, சுகாதார ஆய்வுக்குழு ஆகியவை நியமிக்கப்பட வேண்டும்.

பள்ளி செல்லும் மாணவர்களுக்கான அரசின் வழிமுறைகள் - முழு விவரம்
100 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தொற்று காலங்களில் பள்ளிகள் எவ்வாறு இயங்கின?
3) சமூக இடைவெளி, சுத்திகரிப்பான்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அறிவிப்புப் பலகைகளை நிறுவுதல் போன்றவை தொடர்பான நடவடிக்கையை பள்ளிகளும் தாமாக வகுத்துக் கொண்டு செயல்படுவதை ஊக்குவிக்க வேண்டும்.

4) சமூக இடைவளியை கடைப்பிடித்து பள்ளிகளில் இருக்கை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் அனைத்து மாணவர்களும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். உள்ளேயும் வெளியேயும் மாணவர்கள் வந்து போகும் நேரங்களை பிரித்துப் பிரித்து செயல்படுத்த வேண்டும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
5) எல்லா மாணவர்களும் மாணவர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புகையுடனேயே வகுப்புகளுக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

6) அனைத்து வகுப்புகளுக்குமான பாடமுறைகள், விடுமுறைகள், தேர்வு அட்டவணையை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது அனைத்து மாணவர்களிடமும் பாட புத்தகங்கள் கையிருப்பில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

7) பள்ளி வளாகத்துக்குள் எப்போதும் முழு நேர சுகாதார ஊழியர், செவிலியர், மருத்துவர், மருத்துவ ஆலோசகர் இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

8) மாணவர்களின் உடல்நிலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பள்ளி நிர்வாகம் கேட்டுப் பெற்று அவர்களின் உடல்நிலை மோசமடையும் காலத்தில் அது குறித்த தகவலை உள்ளூர் நிர்வாகத்திடம் தெரிவிக்கும் வசதி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

9) மாணவர்கள் உடல் சுகவீனம் அடையும் காலத்தில் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்து வகுப்புப் பாடங்களை படிப்பதற்கு ஏதுவாக அவர்களின் வருகைப்பதிவில் தளர்வு காட்டி ஊக்குவிக்க வேண்டும்.

10) வீடற்றோர், வேறு இடத்தில் இருந்து குடிபெயர்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் உள்ளிட்டோர் மீது தனி கவனம் செலுத்தி அவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

11) ஊட்டச்சத்தை உறுதிப்படுத்த மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சூடான உணவை சமைத்து பரிமாறுவதை கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது அந்த உணவுக்கு இணையான படித்தொகையை பெற தகுதி பெறும் மாணவர்களுக்கு அந்தத் தொகையை பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும்.

12) பள்ளிக்கு வருபவர்களில் யாருக்காவது கொரோனா தொற்று உறுதியானால், அந்த பள்ளி நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டிய தனிமைப்படுத்துதல், பின்தொடருதல், வைரஸ் பாதிப்புக்குளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான பரிசோதனை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

13) மாணவர்களின் மன நலன், உடல் நலன் தொடர்பாக நெருக்கமான கண்காணித்து அவர்களுக்கான உரிய பரிசோதனைக்கு அவ்வப்போது ஆசிரியர்கள் உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

14) கோவிட்-19 வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், தங்கும் விடுதி ஊழியர்கள் ஆகியோருக்கு விளக்கி அவர்கள் இந்திய அரசின் வழிகாட்டுதல் நெறிகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்றுவிக்க வேண்டும்.

சமூக இடைவெளி பாடம் கற்பிப்பு வழிமுறைகள்
1) ஒட்டுமொத்த கல்வியாண்டுக்கான மாற்று பாட முறை அட்டவணையை தயாரிக்க வேண்டும். கல்வித்துறை இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவுகளின்படி பிரத்யேக கல்வியாண்டுத் திட்டத்தை வகுக்க வேண்டும்.

2) பள்ளிகள் மறுதிறப்பு நடவடிக்கையின்போது மாணவர்கள் ஒன்றிணைந்து பழகும் நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

3) தகவல் தொழில்நுட்ப ஆதாரங்களை பயன்படுத்தி வகுப்புகளை எடுக்கும் வகையில் தங்களுடைய திறன்களை ஆசிரியர்கள் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

4) கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவிஎஸ், மொழிகள், அறிவியல், சமூக அறிவியல், கலை ஆகிய பாடங்களை வித்தியாசமாக கற்பிக்கும் வழிமுறை குறித்து மாணவர்களிடம் விளக்க வேண்டும்.

5) மாணவர்களிடம் நேருக்கு நேராக நடத்தப்படும் பாடங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் விரிவாக விளக்க வேண்டும். தனி நபர்கள் பாடக்குறிப்புகள், குழுவாக சேர்ந்து செய்யப்படும் பிராஜெக்டுகள், பள்ளிகள் அடிப்படையில் செய்யப்படும் மதிப்பீடுகள் குறித்து விளக்க வேண்டும்.

6) வீடற்றோர், வேறு இடத்தில் இருந்து குடிபெயர்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் உள்ளிட்டோர் மீது தனி கவனம் செலுத்தி அவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

7) சமூக இடைவெளியுடன் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் தங்களுடைய பணியை ஆற்ற வேண்டும். இயன்றவரை வீட்டில் மாணவர்களின் பெற்றோர், தாத்தா, பாட்டிகள் போன்றோர் இருந்தால் அவர்கள் மூலம் வீட்டுப்பாடங்களில் மாணவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும்.

8) பிரக்யதா எனப்படும் திட்டம், மறுஆய்வு, ஏற்பாடு, வழிகாட்டல், பேச்சு, பணித்தல், பின்தொடருதல், பாராட்டுதல் என்ற எட்டு அம்ச வழிமுறைகளின்படி டிஜிட்டல் ஆன்லைன் கல்வி மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்பில் இருந்து வீட்டில் இருந்தே பாடங்களை பதிவிறக்கம் செய்யும் வசதியை ஊக்குவிக்க வேண்டும்.

9) குறித்த காலத்தில் பாடங்களை படிக்கும் இலக்கை அடையும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒரு மதிப்பீட்டு அளவை நிர்ணயித்துச் செயல்பட வேண்டும்.

10) வீட்டில் இருந்தபடி படிக்கும் மாணவர்கள், பள்ளிக்கு வரும் நடவடிக்கையை மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் கையாள வேண்டும். அதற்குத்தக்கவறா பாடத்திட்டத்தை உருவாக்கி விடுபட்டுப் போன பாடங்களை மாணவர்களுக்கு சொல்லித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
11) மாணவர்களின் உணர்ச்சிமிகுந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி ஆலோசகர்கள், பள்ளி சுகாதார ஊழியர்கள் இணைந்து செயல்பட வேண்டும். உளவியல் ரீதியாக அவர்களுக்குத் தேவையான ஆதரவை கோவிட்-19 காலத்தின்போதும் பிறகும் வழங்க வேண்டும்.

12) இந்த வழிகாட்டுதல் நெறிகளின் அடிப்படையில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தங்களுக்கென சொந்தமாக வழிகாட்டுதல் நெறிகளை வகுத்து தேவையான பயிற்சியை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.

13) பள்ளிக்கல்வி, ஆண்டுக்கல்வித்திட்டம், பள்ளி செயலாக்க நடைமுறைகளின்போது நிறைவற்றப்படும் சமூக இடைவெளி, கோவிட்-19 வழிமுறைகளுக்கான சரிபார்ப்பு அட்டவணைப்பட்டியலை தயாரித்து உத்வேகத்துடன் மாணவர்களின் கல்வி கற்கும் வாய்ப்பை கட்டியெழுப்ப வேண்டும்.

14) பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் முன்பாக விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் பயிற்சியை மாநில கல்வித்துறை வழங்கிட வேண்டும்.

அக்டோபர் 6,வரலாற்றில் இன்று.இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சித் துறைக்கு அடித்தளமிட்டவரும், வானியல் விஞ்ஞானியுமான மேகநாத் சாஹா (Meghnad Saha) பிறந்த தினம் இன்று

அக்டோபர் 6,
வரலாற்றில் இன்று.

இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சித் துறைக்கு அடித்தளமிட்டவரும், வானியல் விஞ்ஞானியுமான மேகநாத் சாஹா (Meghnad Saha) பிறந்த தினம் இன்று 

# வங்கதேசத்தின் ஷரடோலி கிராமத்தில் (1893) பிறந்தார். தந்தை மளிகை வியாபாரி. வறுமையால் மகனை வேலைக்கு அனுப்ப நினைத்தார். இவரது அறிவுக்கூர்மையால் கவரப்பட்ட ஆசிரியர்கள் அவரிடம் பேசி, படிப்பைத் தொடரச் செய்தனர்.

# ஆரம்பக் கல்வி முடிந்ததும் சிமுலியாவில் இருக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டான். விடுதி, உணவுச் செலவு அதிகமானதால் மிகவும் சிரமப்பட்டான். அனந்தகுமார் தாஸ் என்பவர் வீட்டில் தங்கிக்கொண்டு, அங்கு வீட்டு வேலைகள் செய்தபடியே படித்தான்.

# படிப்பில் படுசுட்டி. சமுதாய நலனிலும் தீவிர நாட்டம் கொண்டிருந்தான். வங்கப் பிரிவினையின்போது 12 வயதுதான். ஆனாலும், போராட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டான். வங்கதேச ஆளுநர், பள்ளிக்கு வந்தபோது, நண்பர்களைத் திரட்டி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினான். இதனால் உதவித் தொகை நிறுத்தப்பட்டது.

# தாக்கா கல்லூரியில் வேதியியல், கணிதவியல், ஜெர்மன் மொழி கற்றார். உதவித்தொகை பெற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். சத்யேந்திரநாத் போஸ், மகலனோபிஸ் ஆகியோர் இவரது சகாக்கள். பிரபுல்ல சந்திர ரே, ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து வழிகாட்டியவர்கள்.

# இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியப் பொருளாதாரப் பணித் தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர விரும்பினார். அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியவர் என்று கூறி அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

# கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல் விரிவுரை யாளராகப் பணியாற்றினார். ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை ஜெர்மனில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார். சூரியன், நட்சத்திரங்களின் வெப்பநிலை, அழுத்தம் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டார்.

# வெப்ப அயனியாக்க கோட்பாடு, கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாட்டை உருவாக்கினார். 1920-ல் வெளிவந்த ‘சூரிய மண்டலத்தில் அயனியாக் கம்’ என்ற இவரது ஆய்வுக் கட்டுரை நவீன வானியலின் திறவுகோலாக அமைந்தது. கதிர்வீச்சு அழுத்தம் குறித்த ஆராய்ச்சியைப் பாராட்டி கல்கத்தா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.

# கல்கத்தா பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையைப் பெற்று லண்டனில் 2 ஆண்டுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராக 15 ஆண்டு கள் பணியாற்றினார். இந்திய நாள்காட்டி முறையான ‘சக ஆண்டு’ குறித்து தெளிவாக விளக்கினார். விடுதலைப் போராட்ட வீரர்களுடன் இருந்த தொடர்பு காரணமாக இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

# கல்கத்தாவில் இவர் 1948-ல் தொடங்கிய ஆராய்ச்சி நிறுவனம் ‘சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அயனியாக்க சமன்பாட்டை கண்டறிந்ததற்காக லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள் உலகம் முழுவதும் பிரசுரிக்கப்பட்டன.

# ஜெர்மனி, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அறிவியல் பயணங்கள் மேற்கொண்டார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1951-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகப் புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானியான மேகநாத் சாஹா 63ஆவது வயதில் (1956) காலமானார்.

அக்டோபர் 6, வரலாற்றில் இன்று.1950 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தில் 1989ஆம் ஆண்டு,முதல் பெண் நீதிபதியாக கேரளத்தைச் சேர்ந்த நீதிபதி எம்.பாத்திமா பீவி நியமிக்கப்பட்ட தினம் இன்று.

அக்டோபர் 6,
 வரலாற்றில் இன்று.

1950 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தில் 1989ஆம் ஆண்டு,
முதல் பெண் நீதிபதியாக  கேரளத்தைச் சேர்ந்த  நீதிபதி எம்.பாத்திமா பீவி நியமிக்கப்பட்ட தினம் இன்று.

பாத்திமா பீவி தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பதவி வகித்தார்(25 ஜனவரி 2007- 3 ஜூலை 2011).

திங்கள், 5 அக்டோபர், 2020

🌟அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்கலாம் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

🌟அக்டோபர் 15 முதல் பள்ளிகளை  திறக்கலாம் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.


தனிமனித இடைவெளி, ஆரோக்கியம், உடல்நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.


 அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. தனிமனித இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


பெற்றோரின் ஒப்புதல் கடிதம் கொண்டு வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம்.


 மாணவர்கள் பள்ளிக்கு வருவதை விட ஆன்லைன் வகுப்புகளை தேர்வு செய்யலாம்.

 
ஆன்லைன் கற்றலை ஊக்குவிக்கலாம்.

மேலும் மாநிலங்கள் தங்களுடைய சொந்த நடைமுறைகளை வகுத்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாகக் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வைக் கடந்த செப்.30-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதில் அக்.15 முதல் பள்ளிகள், பயிற்சி மையங்களைத் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்தியப் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை வெளியிட்டுள்ளது. இதை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

*🌟அதில் கூறப்பட்டுள்ளதாவது:*

பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே பள்ளிகளுக்கு மாணவர்கள் வரமுடியும்.

மாணவர் வருகைப் பதிவேட்டில் நெகிழ்வுத் தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

பாடம் கற்க ஆன்லைன் வகுப்புகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பள்ளிகள் தங்களின் வகுப்பறைகள், கழிப்பறைகள், பிற அறைகள், வளாகம் மற்றும் உபகரணங்களை முறையாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

எல்லா நேரங்களிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தனிமனித இடைவெளி, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பலகைகள், பேனர்களை வாய்ப்புள்ள இடங்களில் வைக்க வேண்டும்.

என்சிஇஆர்டி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் கல்வி அட்டவணையைப் பின்பற்றி, முழுக் கல்வி ஆண்டுக்கும் விரிவான கல்வி அட்டவணையைப் பள்ளிகள் உருவாக்குவது அவசியம்.

அவசரகால உதவிக் குழு, பொதுப் பாதுகாப்புக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு உள்ளிட்ட செயல்பாட்டுக் குழுக்கள் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும்.

வீட்டுப் பள்ளியில் இருந்து முறையான பள்ளிப் படிப்புக்கு மாணவர்களை மென்மையான முறையில் மாற்றிக் கொண்டுவருவதைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சொந்தமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க, சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு அல்லது அதற்கு ஈடான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்.

பள்ளியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டால், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.

அக்டோபர் 5,வரலாற்றில் இன்று.சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் (Ramalinga Adigal) பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 5,
வரலாற்றில் இன்று.

சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் (Ramalinga Adigal) பிறந்த தினம் இன்று.


சிதம்பரம் அடுத்த மருதூரில் (1823) பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். குழந்தைகளுடன் தாய் சென்னை அடுத்த பொன்னேரியில் குடியேறினார். பின்னர் சென்னை ஏழுகிணறு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.

 தமிழ் அறிஞரான அண்ணனிடமே கல்வியைத் தொடங்கினார். பின்னர், தக்க ஆசிரியர்களிடம் பயின்று, தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான அண்ணனுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லை. முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.

ஒருமுறை கோயிலில் இருந்து நள்ளிரவில் வீடு திரும்பியவர், அண்ணியை எழுப்ப மனமின்றி வீட்டு திண்ணையில் பசியோடு படுத்துவிட்டார். அவருக்கு அம்பிகையே நேரில் வந்து அறுசுவை உணவு பரிமாறியதாக நம்பப்படுகிறது.

சைவம், வேதாந்தம், சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், தமிழ் இலக்கிய நூல்களை ஆராய்ந்தறிந்தார். பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக் கண்டு துடித்தார். ‘ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்’ என எடுத்துக் கூறினார்.

 ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865-ல் உருவாக்கினார். பிறகு இதை ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ என்று மாற்றினார். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். ‘கடவுள் ஒருவரே. உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்போல கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்’ என உபதேசித்தார்.

பெண் கல்வியைப் போற்றினார். யோக சாதனப் பயிற்சி பெண்களுக்கும் அவசியம் என்றார். அனைவரும் தமிழ், ஆங்கிலம், வடமொழி கற்க வலியுறுத்தினார். திருக்குறள் வகுப்புகள் நடத்தினார்.

சிறு வயதிலேயே சிறப்பாக கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். முருகனை வாழ்த்தி ‘தெய்வமணி மாலை’ என்ற பாமாலையை இயற்றினார். இவர் பாடிய ‘திருவருட்பா’ 6 திருமுறைப் பகுதிகளாக 399 பதிகங்கள், 5,818 பாடல்களைக் கொண்டது. ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவரது உரைநடை நூல்கள்.

தண்ணீரில் விளக்கை எரியச் செய்தது உட்பட பல அற்புதங்களை இவர் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. 1,596 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி அகவலை ஒரே இரவில் பாடி முடித்தார். சஞ்சீவி மூலிகைகள் குறித்து பல குறிப்புகளை எழுதியுள்ளார்.

வடலூரை சேர்ந்த விவசாயிகள் 80 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அங்கு 1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலையை அமைத்தார். அங்கு ஏழைகளின் பசியாற்றினார். அதனால் ‘வள்ளலார்’ எனப் போற்றப்பட்டார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மிக்கவர். ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை’ என்று இறைவனை ஜோதி வடிவில் கண்ட ராமலிங்க சுவாமிகள் 51ஆவது வயதில் (1874) இறை ஜோதியில் ஐக்கியமானார்.

அக்டோபர் 5, வரலாற்றில் இன்று.சர்வதேச ஆசிரியர் தினம் இன்று.

அக்டோபர் 5, வரலாற்றில் இன்று.

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோ
அமைப்பால் 1994ஆம் கொண்டு வரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து  அக்டோபர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.

ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்
படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியா, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது.

ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அவர்களை நன்றியுடன் நினைவு கூறவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.

அக்டோபர் 5,வரலாற்றில் இன்று.உலக குடியிருப்பு தினம் இன்று

அக்டோபர் 5,
வரலாற்றில் இன்று.

உலக குடியிருப்பு தினம் இன்று.

'வீடமைப்புக் கொள்கை, தாங்கக்கூடிய வீடு' என்றும் தொனிப்பொருளில் 'உலக குடியிருப்பு தினம்' இன்று கொண்டாடப்
படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை 1985ம் ஆண்டு பிரகடனப்படுத்திய உலக குடியிருப்பு தினம் 1986ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதலாவது திங்கட்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.