புதன், 21 அக்டோபர், 2020

முன்னாள்பள்ளிக்கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களின் தாயார் திருமதி .இராசாமணி தங்கபாண்டியன் 20.10.2020 நினைவேந்தல் நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  மாநிலத் தலைவர் திரு .நா.சண்முகநாதன் ,மாநிலச்செயலாளர் திருமுருகசெல்வராசன்,மாநில அமைப்புச் செயலாளர் கோ. சிவக்குமார், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் திரு.சீனி. சின்னசாமி, புதுக்கோட்டை மாவட்டச்செயலாளர் திரு .கே.செல்வராசன், தேனி மாவட்ட செயலாளர் திரு ராஜவேல் மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி சிவகங்கை திருச்சி மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 20.10.2020அன்று முன்னாள்பள்ளிக்கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களின் தாயாரின்திருமதி .
இராசாமணி தங்கபாண்டியன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

🌟ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து ஆயுட்காலமாக (Life Time) மாற்றிட NCTE பொதுக்குழு கூட்டத்தில் முடிவு !!!.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து ஆயுட்காலமாக (Life Time) மாற்றிட NCTE பொதுக்குழு கூட்டத்தில் முடிவு !!!.*

NCTE பொதுக்குழு கூட்ட முடிவுகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.
click here.

அக்டோபர் 21,வரலாற்றில் இன்று.உலகின் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசை உருவாக்கியவரும் ஸ்வீடன் நாட்டு அறிவியலாளருமான ஆல்ஃபிரெட் நோபல் (Alfred Bernhard Nobel) பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 21,
வரலாற்றில் இன்று.


உலகின் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசை உருவாக்கியவரும் ஸ்வீடன் நாட்டு அறிவியலாளருமான ஆல்ஃபிரெட் நோபல் (Alfred Bernhard Nobel) பிறந்த தினம் இன்று. 
 ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் பிறந்தார் (1833). தந்தை கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியியலாளர். இதனால் இயல்பாகவே இவருக்கும் பொறியியலில் குறிப்பாக வெடிபொருட்கள் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருந்தது. ராயல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் இவருக்கு கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தது.

தந்தையுடன் இணைந்து ஆய்வகத்தில் பரிசோதனைகளில் உதவினார். இவரது தந்தை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு இயந்திர கருவிகள் மற்றும் வெடி உற்பத்தியாளராக வெற்றிகரமாகத் திகழ்ந்தார். எனவே தன் மகனை தனிப்பட்ட முறையில் பல ஆசிரியர்களிடம் அனுப்ப முடிந்தது.

இதனால், வேதியியல் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி மற்றும் ரஷ்ய மொழிகளில் சிறந்து விளங்கினார். 1850-ல் பாரீஸ் சென்றார். 18 வயதில் கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் என்பவரின் கீழ் சிறிது காலம் பணிபுரிந்தார். அமெரிக்காவில் 4 ஆண்டுகள் வேதியியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

1857-ல் எரிவாயு மீட்டர் குறித்த தனது கண்டுபிடிப்புகளுக்கான முதல் காப்புரிமையை பெற்றார். குடும்பம் மீண்டும் ஸ்வீடன் திரும்பியது. இவர் வெடிபொருட்கள் குறித்த ஆய்வில் முழு மூச்சாக ஈடுபட்டார். குறிப்பாக நைட்ரோகிளிசரினின் பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார். 1863-ல் வெடி மருந்தைக் கண்டுபிடித்தார்.

பல சிறிய பெரிய விபத்துகளை சந்தித்தாலும் மனம் கலங்காமல் தன் கண்டுபிடிப்புகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த தொழிற்சாலைகளை உருவாக்கினார். பல முயற்சிகளுக்குப் பிறகு நைட்ரோகிளிசரினை விட எளிதாகக் கையாளக் கூடிய மற்றும் பாதுகாப்பான டைனமைட்டையும், சேஃப்டி பவுடரையும் 1867-ல் இவர் கண்டுபிடித்தார்.

இதற்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றார். 1875-ல் டைனமைட்டை விட மேலும் ஸ்திரத்தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார். சிறிய ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டுபிடித்தார். ஆயுதத் தயாரிப்பாளராகவும் விளங்கினார்.

இவரது கண்டுபிடிப்புகள் மூலம் அளவற்ற செல்வத்தை ஈட்டினார். போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளரானார். இவரது நினைவாக நோபலியம் என்று ஒரு தனிமத்துக்கு பெயரிடப்பட்டது. எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்ததன் மூலமும் ஏராளமான செல்வத்தை குவித்தார்.

 சர்வதேச அளவில் 350 காப்புரிமைகளைப் பெற்றார். சமாதானத்தைப் பெரிதும் விரும்புபவராக இருந்தாலும், இவரது மரணத்துக்கு முன் 90 ஆயுத தொழிற்சாலைகளை நிறுவினார். இதனால் இவரை ‘மரணத்தின் வியாபாரி’ என்று கூட பலர் குறிப்பிட்டனர். 1884-ல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது கடைசி உயிலின் மூலம் தான் ஈட்டிய செல்வத்தில் பெரும் பகுதியை தன் பெயரிலான அறக்கட்டளைக்கு வழங்கினார்.

இதன் மூலம் கிடைக்கிற வருவாயைக் கொண்டு வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளில் சிறப்பான சேவைகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துபவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.

உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த அறிவியலாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவும் புகழடையவும் காரணமாக இருந்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஆல்ஃபிரெட் நோபல் 1896-ல் பெருமூளை ரத்தக் கசிவு காரணமாக 63ஆவது வயதில் காலமானார்.

அக்டோபர் 21,வரலாற்றில் இன்று உலக ஆப்பிள் தினம் இன்று.

அக்டோபர் 21,
வரலாற்றில் இன்று 

உலக ஆப்பிள் தினம் இன்று.


 அந்தவகையில் ஆப்பிள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள்.

உலகளாவியரீதியில் 7500க்கும் மேற்பட்ட ஆப்பிள் வகைகள் உள்ளன.

வாழைப்பழங்கள்,  திராட்சைப் பழங்களினைத் தொடர்ந்து உலகில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது ஆப்பிள் பழங்கள் ஆகும்.

கஸ்பியன் மற்றும் கருங்கடலிற்கு இடைப்பட்ட பிராந்தியத்திலே ஆப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாம். குறிப்பாக, கசகிஸ்தான் நாட்டிலேயே ஆப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.

கி.மு 6500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் ஆப்பிள் பழங்களினை நுகர்ந்ததிற்கான  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆப்பிள் மரங்கள், ஒரு ஆப்பிள் பழத்தினை உற்பத்தியாகுவதற்கு 50 இலைகளிலிருந்து சக்தியினை பெற்றுக்கொள்கின்றன.

ஆப்பிள் மரங்களில் சில 40அடி உயரத்திற்கும் அதிகமான உயரம்வரை வளரக்கூடியதுடன், 100ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியவையாகும்.

புராதன உரோமர்களினதும், கிரேக்கர்களினதும் விருப்பத்திற்குரிய பழமாக ஆப்பிள் விளங்கியது.

ஆப்பிள்கள் மரங்கள் ரோஸ்(Rose) குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும்.

ஆப்பிளின் இரசாயனவியல் பெயர்; "அப்ளிகுஸ் ரோசாசியா"

ஆப்பிள் மரங்கள் 4 – 5 வயதினை அடைந்தவுடன் பழங்களினை தோற்றுவிக்க தொடங்குகின்றன.

தூய ஆப்பிள் பழங்களினை நீரில் இட்டால் அவை மிதக்கும் தன்மை கொண்டவையாகும். ஏனெனில் ஆப்பிள் பழங்களில் 25% வளி உள்ளடங்கியுள்ளது.

ஆப்பிள் பழங்களின் தோலில் அதிகமான நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளடங்கியுள்ளன. இதனால் அவற்றினை தோலுடன்(Quercetin அடங்கியுள்ளது) உட்கொள்வதே சிறந்ததாகும்.

நடுத்தர அளவினை உடைய ஒரு ஆப்பிளில் 80 கலோரி சக்தி உள்ளடங்கியுள்ளதாம்.

உலகில் அதிகளவில் ஆப்பிள் பழங்களினை உற்பத்திசெய்யும் நாடுகள்; சீனா(உலக உற்பத்தியில் 40% ) , ஐக்கிய அமெரிக்கா, போலாந்து, ஈரான், துருக்கி, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, சிலி.


ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடிக்க ஆப்பிள் பழங்களே காரணமாகும். 

"தினசரி ஒரு ஆப்பிள் பழத்தினைச் சாப்பிடுவதன்மூலம் மருத்துவரை நாடவேண்டிய தேவையே இருக்காது" என்பது உலகளாவிய
ரீதியிலான ஒரு பிரபல்யமான மருத்துவக் குறிப்பாகும். ஏனெனில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களினை ஆப்பிள் பழங்கள் கொண்டிருப்பதனால் ஆகும்.

செவ்வாய், 20 அக்டோபர், 2020

பள்ளிக் கல்வி - NEET - 2021 தேர்வுக்கு 01.11.2020 முதல் நடைபெறும் இணையவழியிலான இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

பள்ளிக் கல்வி - NEET - 2021 தேர்வுக்கு 01.11.2020 முதல் நடைபெறும் இணையவழியிலான  இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

click here

அக்டோபர் 20, வரலாற்றில் இன்று.எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 20, வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவு தினம் இன்று.

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) மூத்த தமிழக பெண் எழுத்தாளர்
 ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

ராஜம் கிருஷ்ணன்
1925ஆம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15ஆவது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.திருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.

பொதுவாக தனது படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு வாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர்.
1970ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மணிகள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர். இவரின் 80க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்
பெறுகின்றன.

இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே. 

கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில், 2002 ஆம் ஆண்டில், கணவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. முதுமையில் வறுமையால் வாடிய இவர் சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர்-
முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

அக்டோபர் 20, வரலாற்றில் இன்று.உலக புள்ளியியல் தினம் இன்று.

அக்டோபர் 20,
 வரலாற்றில் இன்று.

உலக புள்ளியியல் தினம் இன்று.

ஐக்கிய நாடுகள் பொது சபை, கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 20  ஆம் தேதியை உலக புள்ளியியல் தினம்  (World Statistics Day, October 20)  ஆக அறிவித்துள்ளது. புள்ளியியல் என்பது கணித அறிவியல். இது விவரங்களைத் திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல், தொடர்புபடுத்திப் பார்த்தல், விளக்குதல், விவரங்களை வரைபடமாக வழங்குதல் ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

இவ்வாறு பெறப்படும் புள்ளியியல் விவரங்கள் வணிகம் மற்றும் அறிவியல் போக்குகளை முன்கூட்டியே கணிக்க உதவகின்றன. இயற்கை அறிவியல்கள், அனைத்து சமூக அறிவியல்கள், அரசாங்கம் மற்றும் வணிகம் போன்ற பல்வேறு கல்வித்துறைகளிலும் புள்ளியியல் பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் தொகை, மிருகங்கள், தயாரிப்பு பொருட்கள் முதலியவற்றின் புள்ளி விவரங்களை சேகரித்து, கணக்கியல் அடிப்படையில் ஆராய்ந்து, தொகுக்கப்பட்ட தகவல்களை கணக்கியல் வடிவத்தில் வெளிப்படுத்துவதே புள்ளி விவர படிப்பு.உயிரியல், கல்வி, பௌதிகம், மனோதத்துவம், சமூகவியல் முதலிய துறைகளில் புள்ளி விவரம் பயன்படுத்தப்படுகிறது.

ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் இப்புள்ளி விவரங்களைச் சார்ந்தே உள்ளன. பல்வேறு அரசுத் துறைகளிலும், பல்வேறு வகையான இடைநிலை புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. புள்ளி விவரங்களின் பயன்பாட்டின் வெற்றியையும், அவற்றின் சேவை, மேன்மை மற்றும் தொழில் திறமையையும் கொண்டாடுவதே இத்தினத்தின் பொது நோக்கமாகும்.

திங்கள், 19 அக்டோபர், 2020

அக்டோபர் 19,வரலாற்றில் இன்று.கடித தொடர்புக்கு பயன்படும் தபால் கார்டு அறிமுகமான தினம் இன்று.

அக்டோபர் 19,
வரலாற்றில் இன்று.


கடித தொடர்புக்கு பயன்படும்  தபால் கார்டு அறிமுகமான தினம் இன்று.

1869ஆம் ஆண்டு, முதல் தபால் கார்டு ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. வியன்னா ராணுவ கழகத்தை சேர்ந்த,  டாக்டர் இம்மானுவேல் ஹெர்மன் என்பவர் இதனை வடிவமைத்தார். 1875இல் சர்வதேச தபால் யூனியன் உருவான போது அப்போதையை இந்திய தபால்துறை டைரக்டர் ஜெனரலாக இருந்த மோன்டீத் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் 1879இல் தபால்கார்டு முறை இந்தியாவில் அறிமுகமாகியது. இங்கிலாந்தில் 1870ஆம் ஆண்டிலும், இந்தியாவில் 1.7.1879 அன்றும் தபால் கார்டுகள் அறிமுகமாயின.

அக்டோபர் 19,வரலாற்றில் இன்று.சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (V.Ramalingam Pillai) பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 19,
வரலாற்றில் இன்று.


சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (V.Ramalingam Pillai) பிறந்த தினம் இன்று. 


நாமக்கல் அடுத்த மோகனூரில் (1888) பிறந்தார். தாய் கூறிய இதிகாச, புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பொய் பேசக்கூடாது, நல்லவனாக விளங்க வேண்டும் என்ற தாயின் அறிவுரை அவர் மனதில் ஆழமாக பதிந்தது.

நாமக்கல்லில் தொடக்கக் கல்வி, கோவை மெட்ரிக் பள்ளியில் உயர்நிலைக் கல்வி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். எழுதுவது, ஓவியம் வரைவதில் சிறந்து விளங்கினார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் 1906-ல் இணைந்தார்.

தலைமைக் காவலரான தந்தை வெங்கடராமன், இவரையும் காவல் துறையிலேயே சேர்த்துவிட பெருமுயற்சி எடுத்தார். இவருக்கு விருப்பம் இல்லாததால் வீட்டைவிட்டு வெளியேறினார். 15 நாட்கள் வெளியே சுற்றித் திரிந்து வீடு திரும்பினார்.

அவரை மேலும் வற்புறுத்தாமல் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி வாங்கித் தந்தார் தந்தை. அதிலும் மனம் செல்லவில்லை. பணியை உதறினார். தந்தை முயற்சி எடுத்து, ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை பெற்றுத் தந்தார். இவர் அடிக்கடி அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டவர், முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பின்னர் காந்தியின் அகிம்சை, அறவழிக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். அறப்போராட்டத்தால் மட்டுமே நாடு விடுதலை அடையும் என்ற முடிவுக்கு வந்தார். காங்கிரஸில் இணைந்தார்.

எளிய சொற்களால் கவிதை பாடி, தேசிய, காந்தியக் கொள்கைகளைப் பரப்பினார். தேசபக்திப் பாடல்கள் பாடியும், ஆவேச உரைகள் நிகழ்த்தியும் இளைஞர்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தினார். ஏராளமான கவிதைகள் எழுதிக் குவித்தார். ‘தேசியக் கவி’ என்று போற்றப்பட்டார்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். 1932-ல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்ததுதான் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடல்.

மலைக்கள்ளன், மரகதவல்லி, கற்பகவல்லி, காதல் திருமணம் உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். இவரது ‘மலைக்கள்ளன்’ நாவல், எம்ஜிஆர் நடிப்பில் திரைப்படமாக வந்தது. இசை நாவல், கட்டுரை, சுயசரிதம், புதினம், திறனாய்வு, நாடகம், கவிதைத் தொகுப்பு, சிறு காப்பியம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர். மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார்.

நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். பத்மபூஷண் விருது பெற்றார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தார்.

தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், காங்கிரஸ் புலவர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 84ஆவது வயதில் (1972) காலமானார்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

👫தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்களின் இல்லத் திருமண விழா நிகழ்வுகள்.

👫தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்களின் இல்லத் திருமண விழா நிகழ்வுகள்.
பார்க்க இங்கே கிளிக் செய்க..