ஞாயிறு, 19 ஜனவரி, 2020

இருள் சூழ்கிறது!விடியலைத் தேடுங்கள்!!
********************
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்குமேயானால் பல பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்படும். வட்இந்திய கூலி தொழிலாளர்களைப்போல் தமிழ்நாட்டிலேயே  நிறையக் கூலித்தொழிலாளர்கள் கிடைப்பார்கள்.  மேனாள் உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.A.K.ராஜனே சொல்கிறார் என்றால் பொதுத்தேர்வு முறை  எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிய முடிகிறது.
,*NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்ட 100% Full claim தொகையை வட்டியும், முதலுமாக அபராதத்துடன் பெறுவது எப்படி...???*
📣📣📣📣📣📣📣📣

கரூர் மாவட்டம்- கடவூர் ஒன்றியம், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .


*இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.*

அதற்குமேல் தர மறுத்து விட்டது.


மாணிக்கம் அவர்கள்,
கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, தொடர் முயற்சியினால் தீர்ப்பு பெறப்பட்டது.


*தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,*

_அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._


_நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS ஏற்கவேண்டும்._

(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)


01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.


அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.


*ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.*


அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..


*NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018*

GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்

http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

************************

கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.

இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

*அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..*

*************************

டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..

(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)

*டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..*

*************************

*அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..*
http://www.tn.gov.in/go_view/dept/9


*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்*
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


*NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்*
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx


(NHIS Insurance Complaint number- 7373073730)


🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
தமிழக அரசே!பள்ளிக்கல்வித்
துறையே!
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை முற்றிலுமாக கைவிடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வலியுறுத்துகிறது.

ஜனவரி 19,
வரலாற்றில் இன்று.

உலகின் முதல் C Brain எனும்
கம்ப்யூட்டர் வைரஸ் அமெரிக்காவின்
IBM PC
கம்ப்யூட்டரை முதன்முதலில்
தாக்கிய தினம் இன்று( 1986 ).

பாகிஸ்தான்   Lahore ஐ  சேர்ந்த சகோதரர்களான Basit Farooq Alvi  மற்றும்  Amjad Farooq Alvi  ல் இவ்வைரஸ் பரப்பப்பட்டது.
ஜனவரி 19,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் இன்று(1966).

இந்தியாவின் இரண்டாவது பிரதமராக பதவி வகித்து வந்த
லால் பகதூர் சாஸ்திரி மரணமுற்றதைத் தொடர்ந்து சாஸ்திரி அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த  ஜவஹர்லால் நேருவின் மகள்  இந்திராகாந்தி பிரதம மந்திரியாக பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். எனினும் அவர் பிரதமராக குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது ஜனவரி 24ஆம் தேதி ஆகும். அந்த இடைக்காலத்தில் குல்ஜாரிலால் நந்தா தற்காலிக பிரதமராக பதவி வகித்தார்.
ஜனவரி 19, வரலாற்றில் இன்று.

 நீராவி இன்ஜினில் மாற்றங்கள் கொண்டு வந்து உலகையே திருப்பிப்போட்ட அற்புத பொறியியல் வல்லுநர் ஜேம்ஸ் வாட் பிறந்த தினம் இன்று.

ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்காட்லாந்து வறுமையில் வாடியது  இவரின் குடும்பம்.  இளவயதில் இருந்தே வடிவியல் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் வரைய தாளில்லாமல் தரையில் வரைந்து பழகினார் . உடல் நலம் அடிக்கடி சரியில்லாமல் போய்விடும் இவருக்கு. பல பிள்ளைகள் கொள்ளை நோயில் இறப்பதை கண்ட இவர் அம்மா பள்ளிக்கு இவரை அனுப்ப மாட்டார். பள்ளிக்கல்வியே தடைபட்டது .

வேலையை செய்ய விலங்குகள், மனிதர்கள் பயன்படுத்த பட்ட அந்த காலத்தில் பல மாற்றங்கள் வந்தது . 1698-ஆம் ஆண்டு தாமஸ் சவேரி என்பவர் நீராவியைக் கொண்டு தண்ணீரை இறைக்கும் ஓர் எளியக் கருவியை உருவாக்கினார் . அந்தக் கருவியில் சில மாற்றங்களை செய்து மேம்பட்ட நீராவி இயந்திரத்தை பதினான்கு ஆண்டுகள் கழித்து உருவாக்கினார் தாமஸ் நியூக்கோமன் . ஆனால் அவையெல்லாம் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அளவுக்குதான் சக்தி கொண்டவையாக இருந்தன.

படிப்பு முடிந்து லண்டனுக்கு வந்த ஜேம்ஸ் வாட் ஓராண்டுக்கு விஞ்ஞானக் கருவிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அதற்கு பின் கிளாஸ்கோ பல்கலைகழகத்தில் கருவிகள் தயாரிக்கும் பொறுப்பில் சேர்ந்தார் அவர். தாமஸ் நியூகோமன் உருவாக்கிய இயந்திரம் பல்வேறு குறைகளோடு இருந்தன. ஆற்றல் விரயம் அதிகமாக இருந்தது

ஜேம்ஸ் வாட் வீட்டில் கெட்டிலை அடுப்பில் வைத்திருந்த பொழுது நீராவி, கெட்டிலின் மூடியை தூக்கி நிலையாக நிற்க வைப்பதை பார்த்தார் விஞ்ஞானக் கருவிகள் செய்யும் பயிற்சியும், இயற்கையிலேயே அவருக்கு இருந்த கற்பனை சக்தியும் கைகொடுக்க ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தில் பல முக்கியமான மாற்றங்களை செய்தார். பதினேழு ஆண்டு உழைப்பில் சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி காப்புரிமம் பெற்றார். அந்த மாற்றங்களால் அந்த இயந்திரத்தின் சக்தி பன்மடங்கு பெருகியது.

இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் ‘centrifugal governor’ அழுத்தமானியையும் அவர் கண்டுபிடித்தார். ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரம் வந்த பிறகு நெசவாலைகள் முதல் உற்பத்தி ஆலைகள் வரை இயந்திரமயமாயின. உற்பத்திப் பன்மடங்குப் பெருகியது. தொழிற்புரட்சியின் மாபெரும் பங்களிப்பை தந்தவர் வாட் என நாடே கொண்டாடியது. ஏழ்மை, உடல்நலமின்மை ஆகியனவற்றை வென்று சாதித்தவர் ஜேம்ஸ் வாட்.
ஜனவரி 19,
வரலாற்றில் இன்று.

தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்தவர். இவரின் முக்கிய கண்டுபிடிப்பான ‘மின்விளக்கு’ அமெரிக்காவின் ரோசெல்லி மற்றும் நியூஜெர்சி நகரத்தின் தெருக்கள் மற்றும் வீடுகளில் ஒளிர்ந்த தினம்  இன்று(1883).

சனி, 18 ஜனவரி, 2020








தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள்
மேனாள் மத்திய இணையமைச்சர் திரு.செ.காந்திசெல்வன்
அவர்களை ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு சம்பந்தமாக இன்று (18/01/2020) நண்பகல் சந்தித்தனர்.








தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள்
 பரமத்திவேலூர்  சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.மூர்த்தி அவர்களை ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு சம்பந்தமாக இன்று (18/01/2020) முற்பகல் சந்தித்தனர்.