திங்கள், 20 ஜனவரி, 2020

ஜனவரி 20,
வரலாற்றில் இன்று.

தலைசிறந்த எழுத்தாளரான ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் பிறந்த தினம் இன்று.

இவர் 1873ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஃபார்சோ நகர் அருகே உள்ள ஹிம்மர்லேண்ட் கிராமத்தில் பிறந்தார்.

பல அறிவியல் துறைகளை உள்ளடக்கிய மருத்துவ படிப்பு படிக்கும்போது, இவருக்கு படைப்புக் களத்தில் ஆர்வம் அதிகமானதால் இறுதியில், எழுத்தாளராக வேண்டும் என தீர்மானித்தார்.

1898 முதல் 1910 வரை வெளிவந்த "ஹிம்மர்லேண்ட் ஸ்டோரிஸ்" (Himmerland stories) என்ற கதைத்தொடர் இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இவர் எழுதிய கொன்ஜென்ஸ் ஃபால்ட் (தி ஃபால் ஆஃப் தி கிங்) என்ற வரலாற்று நாவல்கள் டென்மார்க்கின் குறிப்பிடத்தக்க வரலாற்று நாவல் என்று போற்றப்படுகிறது.

பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான கோட்பாடுகளின் அடிப்படையில் "டென் லாங்கெ ரெஜ்சி" என்ற தலைப்பில் 6 நூல்களை எழுதியுள்ளார்.

1944இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றார். கவிதைக் களத்தில் சிறப்பாக பங்காற்றிய ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் 77ஆவது வயதில் (1950) காலமானார்
ஜனவரி 20,
வரலாற்றில் இன்று.

எல்லை காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கப்பார் கான் நினைவு தினம் இன்று.

கான் அப்துல் கப்பார் கான்(Khan Abdul Ghaffar Khan, 06 பிப்ரவரி 1890 - 20 ஜனவரி 1988)  பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்.

இளம் வயதில் தனது குடும்பத்தால் பிரிட்டிஷ் போர்ப்படையில் சேர்க்கப்பட்டார்.

இவர் ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர், ஒரு இந்தியன் மீது காட்டிய கொடுமையைக் கண்டு சலிப்படைந்தார். இங்கிலாந்தில் இவர் படிக்க வேண்டும் என்று இவர் குடும்பம் முடிவு செய்தததை இவரது தாய் தடுத்ததால் போகவில்லை.

குதை கித்மத்கர் (அதாவது "இறைவனின் தொண்டர்கள்") என்ற புரட்சிப் படையை அமைத்த இவர் பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த இவர், காங்கிரஸ் கட்சி பிரிவினைத் திட்டத்தை ஆதரித்தவுடன், "எங்களை ஓநாய்களிடம் எறிந்துவிட்டீரே" என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சொன்னார்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்த இவர் பலமுறை பாகிஸ்தான் ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய உளவாளி என்று தூற்றப்பட்டார்.

1985இல் நோபல் அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட இவர், 1987இல் பாரத ரத்னாபெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமை பெற்றவர்.

1988இல் இவர் காலமானார்.
ஜனவரி 20,
வரலாற்றில் இன்று.

நிலவில் கால் வைத்த இரண்டாவது மனிதர் பஸ் ஆல்ட்ரின் பிறந்த தினம் இன்று.

✈ அமெரிக்க விண்வெளி வீரரும், விமானியுமான பஸ் ஆல்ட்ரின் 1930ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள கிளென் ரிட்ச்சில் பிறந்தார். இவரின் இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின் ஆகும்.

✈ இவர் பஸ் (BUZZ) என்ற பெயரிலேயே பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். எனவே இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரப்பூர்வமாக 1988ல் மாற்றிக் கொண்டார். 1963ல் நாசா விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

✈ முதன்முதலாக சந்திரனுக்கு மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் நிலாவை நோக்கி பயணம் செய்த இவர் சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமைக்குரியவர்.
ஜனவரி 20,
வரலாற்றில் இன்று.


பெ. தூரன் என்கிற  பெரியசாமி தூரன் நினைவு தினம் இன்று.

பெரிய.தூரன் (செப்டம்பர் 26, 1908 - ஜனவரி 20, 1987) ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள்  நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.ர

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

Pariksha Pe Charcha 2020 - பாரதப் பிரதமர் உரையினை அறிக்கையாக அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும் பயமின்றியும் எழுதும் வகையில் Pariksha Pe Charcha 2020 எனும் நிகழ்ச்சி மூலம் பாரதப் பிரதமர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் 20.01.2020 அன்று புதுடில்லியில் உள்ள Talkatora ஸ்டேடியத்தில் உரையாற்றவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்ததுக்கிணங்க ,  கடிதம் மூலம் பள்ளி மாணாக்கர்கள் கட்டுரைகள் இணையதள வழியில் சமர்ப்பித்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 20.01.2020 அன்று புதுடில்லியில் உள்ள Talkatora ஸ்டேடியத்தில் பாரதப் பிரதமர் அவர்களின் உரையை தூர்தர்ஷன் மற்றும் வானொலி உட்பட அனைத்து அரசு ஊடகங்களின் மூலம் நேரடியாக ஒளிப்பரப்பப்பட உள்ளது . இதனை பிரதம மந்திரி அலுவலக இணையதளங்கள் பற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் இயங்கும் நேரலையாக Youtube Channel of MHRD , Mygov. in , Facebook Live and Swilyamprabha Channels of MIIRD மூலமும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

1.இதன் தொடர்ச்சியாக , 20.01.2020 அன்று காலை 10 . 30 மணியளவில் துவங்கப்பட இருக்கும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் உரையை அனைத்துப் பள்ளிகளிலும் காண்பதற்கும் கேட்பகற்கும் முன்னதாக ஏற்பாடுகள் செய்யவும் , இந்நிகழ்ச்சி - சார்ந்து  Pariksha Pe Charcha 2020 தொடர்பான படங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் பள்ளியின் தகவல் பலகை மற்றும் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தி இந்நிகழ்ச்சியை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யவும் ,

2 .இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களிடம் தங்கள் வினாக்களை நேரடியாக கேட்கவும் அனுமதிக்கப்படுவர் என்பதாலும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்கள் இந்நிகழ்ச்சியினை தவறாது காணும் பொருட்டும் , கேட்கும் பொருட்டும் தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் இதர சாதனங்கள் தயார் நிலையில் வைத்திடவும் அதற்கான செலவினங்களை மேற்கொள்ள Samagra Shiksha வின் திட்ட நிதியினை பயன்படுத்தவும்.

3 . இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்த மாணாக்கர் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பின்னூட்டம் ( Feedback ) போன்ற தகவல்களை உள்ளடக்கிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைத் தொகுத்து அறிக்கையாக அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சற்றறிக்கை மூலம் தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இயக்குநர் ,  பள்ளிக்கல்வித்துறை.

EMIS - HOW TO VERIFY 5 & 8 STUDENTS NAME FOR NOMINAL ROLL...

*🌷NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்ட 100% Full claim தொகையை வட்டியும், முதலுமாக அபராதத்துடன் பெறுவது எப்படி...???*

*கரூர் மாவட்டம்- கடவூர் ஒன்றியம், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .*


*இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.*

*அதற்குமேல் தர மறுத்து விட்டது.*


மாணிக்கம் அவர்கள்,
கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, தொடர் முயற்சியினால் தீர்ப்பு பெறப்பட்டது.


*தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,*

*அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*


*நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS ஏற்கவேண்டும்.*

*(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)*


*01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.*


*அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.*


*ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.*


*அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..*



*NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018*

*GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்*

http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

************************

*கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.*

*கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.*

*இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..*

*அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..*

*************************

*டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..*

*(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)*

*டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..*

*************************

*அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..*
http://www.tn.gov.in/go_view/dept/9


*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்*
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


*NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்*
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx


(NHIS Insurance Complaint number- 7373073730)
இருள் சூழ்கிறது!விடியலைத் தேடுங்கள்!!
********************
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்குமேயானால் பல பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்படும். வட்இந்திய கூலி தொழிலாளர்களைப்போல் தமிழ்நாட்டிலேயே  நிறையக் கூலித்தொழிலாளர்கள் கிடைப்பார்கள்.  மேனாள் உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.A.K.ராஜனே சொல்கிறார் என்றால் பொதுத்தேர்வு முறை  எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிய முடிகிறது.
,*NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்ட 100% Full claim தொகையை வட்டியும், முதலுமாக அபராதத்துடன் பெறுவது எப்படி...???*
📣📣📣📣📣📣📣📣

கரூர் மாவட்டம்- கடவூர் ஒன்றியம், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .


*இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.*

அதற்குமேல் தர மறுத்து விட்டது.


மாணிக்கம் அவர்கள்,
கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, தொடர் முயற்சியினால் தீர்ப்பு பெறப்பட்டது.


*தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,*

_அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._


_நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS ஏற்கவேண்டும்._

(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)


01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.


அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.


*ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.*


அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..


*NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018*

GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்

http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

************************

கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.

இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

*அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..*

*************************

டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..

(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)

*டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..*

*************************

*அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..*
http://www.tn.gov.in/go_view/dept/9


*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்*
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


*NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்*
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx


(NHIS Insurance Complaint number- 7373073730)


🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
தமிழக அரசே!பள்ளிக்கல்வித்
துறையே!
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை முற்றிலுமாக கைவிடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வலியுறுத்துகிறது.