வியாழன், 23 ஜனவரி, 2020

ஜனவரி 23,
வரலாற்றில் இன்று.

தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1957).



1956ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான "தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்" சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆட்சி மொழி என்றால் என்ன.?

அரசு அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தின் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழியே ஆட்சி மொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழி சட்டம்:

தமிழகத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது தமிழ். எனவே தமிழ்நாட்டில் (அப்போது சென்னை மாகாணம்) தமிழ் தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்தச் சட்டம் 1957ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி தமிழக அரசின் உத்தரவுப்படி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் தமிழ் தான் ஆட்சிமொழி என்று உறுதிபடுத்தப்பட்டது.

ஆட்சிமொழிக் குழு அமைப்பு:

அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசால், ஆட்சிமொழிக் குழு 1957ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழ் வளர்ச்சித் துறை:

அரசு அலுவலகங்களில் விதிகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. இந்த நடைமுறைகளை உடனடியாகத் தமிழுக்கு மாற்றுவதில் பல சிக்கல்கள் உருவானது. எனவே தமிழ் வளர்ச்சித் துறை என்ற தனித் துறையை உருவாக்கி ஆட்சிமொழி திட்டச் செயலாக்கத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து தமிழ் வளர்ச்சி இயக்ககம் எனும் தனித்துறை அமைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்டத்தைச் செயல்படுத்துதல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.

தமிழ் வளர்ச்சித் துறையின் பணிகள்:

தமிழ் வளர்ச்சித் துறையின் மிக முக்கிய பணி தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது. இதன்படி அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னரே, சோதனை முறையில் 1951-ஆம் ஆண்டிலேயே திருச்சி நகராட்சியில் ஆட்சி மொழியாக தமிழ் பயன்படுத்தப்பட்டது நினைவு கூறத்தக்கது.

சனவரி 22 ~ சனவரி 22,2019 ஆம் ஆண்டு நாள் மறக்க முடியாத நாள்...

சூலை 2, 2003 ஆம் ஆண்டு நாள்(டெசுமா) போன்று தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசூழியர் அமைப்புகளின் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட நாள் இந்த சனவரி22,2019 ஆம் ஆண்டுநாள்.

2019சனவரி 22 இல் தொடங்கிய ஜாக்டோ-ஜியோ  காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தின் முதலாம் ஆண்டு நாள்.

ஓராண்டு காலத்திற்கு முன் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கிய நாளில் தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசூழியர்களின் கோரிக்கைகள் என்னவாக இருந்ததோ?!எவ்வளவாக இருந்ததோ ?!அவைகள்
அதே நிலையில்,
அதே அளவில்,
அதே வகையில் அப்படியாகவே தான் இன்றும் இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் போராட்டக்காலத்தில்,
போராட்டத்திற்கு பிந்தையகாலத்தில் கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தே உள்ளது எனலாம்.

போராட்டக்காலக் கோரிக்கைகள் அப்படியே
நிலை மாறாது,
நிறம் மாறாது இருப்பதற்கு யார்காரணம்?!எவர் காரணம்?!எது காரணம் ?!என்பது மில்லியன் டாலர் கேள்வி?!

தமிழகரசா? ஆசிரியர் -அரசூழியர்களா?,ஆசிரியர் -அரசூழியர் அமைப்புகளா?காவல்துறையா?நீதிமன்றமா?
சமூக ஆர்வலர்களா?பொதுமக்களா?அரசியல் தட்பவெப்ப சூழ்நிலையா?என்பதெல்லாம் ஆய்வுக்குரியதாகும்; ஆராயப்படவேண்டியதாகும். 

எவை எப்படி ஆயினும், இக்கால வரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்று பங்களிப்புச் செய்துள்ள ஆசிரியர்- அரசு ஊழியர்கள் சுயநலவாதிகள் அல்ல;
பொதுநல வாதிகளே!தியாகச்சீலர்களே!

தமிழ்நாட்டின் பொதுக்கல்வி முறை காப்பற்றப்பட வேண்டும்.
கல்வித்துறை சீர்திருத்தங்கள் என்றபெயரில் தொடக்கக்கல்வித்துறையை அழிப்பதைக் கைவிட வேண்டும்.  பள்ளிகள் மூடப்படுவது கைவிடப்பட வேண்டும்.
சத்துணவு மையங்கள் இழுத்து சாத்துவது தடுக்கப்பட வேண்டும்.
வேலைநியமனத் தடைச்சட்டத்திற்கு இணையான அரசாணையை திரும்பப்பெற வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி போராடிய     சமூகப் போராளிகள் தமிழகத்தில்  இவர்களே!

இவைகளோடு   இச்சமூகப் போராளிகளின் போராட்டங்கள், தியாகங்கள் முடிந்துவிட வில்லை.

மக்களாட்சி நாட்டில் மக்களுக்கான கோரிக்கைகளை  வலியுறுத்தி மக்களின் ஒருபகுதியாக ஆசிரியர்-அரசு ஊழியர்கள் போராடியற்காக காவல்துறையின் கைதுநடவடிக்கைகள்,
காவல் துறையின் தேடுதல் வேட்டைகள்,
தலைமறைவு வாழ்க்கைமுறைகள் ,
முன் எச்சரிக்கை கைதுகள், இடமாறுதல் மிரட்டல்  நடவடிக்கைகள், ஒழுங்குநடவடிக்கை எச்சரிக்கைகள், பொய்யான குற்றச்சாட்டின் பேரில் காவல்நிலைய முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறச்செய்தல்,
மத்திய சிறைச்சாலையில் கைதி வாழ்க்கை வாழ்தல், தெருப்போராட்டம் நீதிமன்றப் போராட்டமாக திசைமாறி பிணைக்கோரும் நிலையிலான  நடவடிக்கைகள், எந்த அரசிடம் கோரிக்கை வைத்தோமோ ,
எந்த அரசின் முன் நெஞ்சுரத்துடன் போராட்டம் தொடங்கினோமோ அந்த அரசிடமே பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடுக!என்று கோரும் செயல்பாடுகள் என்று போராட்டம்  திசைமாறி பள்ளி-அலுவலகம் திறக்கப்பட்டு
முழுவேகத்துடன் செயல்படுவது கூட அறியாது சிறைச்சாலைகளில் வாடி வதங்கிய தியாகச்செம்மல்கள் இவர்கள்!

எல்லாக்கோரிக்கைகளையும் தமிழக அரசின் செயலாளர்களிடம்,துறைத்தலைவர்களிடம்,அமைச்சர் பெருமக்களிடம் எடுத்துரைத்து ,
முதலமைச்சரின் சந்திப்புக்கு
தவமாய் தவமிருந்து இருந்தும் அரசின்,
ஆட்சியாளர்களின் பாராமுகத்துடனே மீளப்பணியமர்வு பெற்று ,
குற்றக்குறிப்பாணைக்கு விளக்கமளித்துக்கொண்டே இன்றுவரையிலும்  உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்கும் பொறுமைசாலிகள் மட்டுமல்ல  பெருமைக் குரியவர்கள் இவர்களே!

போராட்டக்காலத்திற்கு ஊதிய வெட்டு,
ஆண்டு ஊதிய உயர்வு இழப்பு,
பதவி உயர்வு மறுப்பு,
தேர்வுநிலை-சிறப்பு நிலை பறிப்பு என்று கழுத்துக்கு மேல் தொங்கும் எல்லாக்கத்திகளுக்கும் உழைப்பினை, வியர்வையை, குருதியை என்று தனித்தனியாக சொல்ல முடியாத வகையில் உடல்,பொருள், ஆவி  அனைத்தையும்  போராட்டத் வேள்வியின் அகோரப்பசிக் கொண்ட பெருநெருப்புக்கு படைத்துள்ள தியாகமிகு தேசப்பக்தர்கள் இவர்களே!

இத்தேசப் பக்தர்களும்,
இவர்களது குடும்பத்தினரும் அடைந்துள்ள எல்லா வகையான  இழப்புகளும், சிரமங்களும்,
துன்ப-துயரங்களும்  ஈடுசெய்யமுடியாதவைகளாகும்.

 இத்தகு மனிதப்புனிதர்களால் தான் தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர் சமுதாயம்
இன்றும் எல்லாவகையான பாதுகாப்புகளுடன் சமூக-அரசியல்-பொருளாதார கெளரவத்துடன், சுயச்சார்போடு ஓரளவிற்கேனும் சிறப்புமிகு வாழ்க்கையில் பயணிக்க முடிகிறது;இயலுகிறது எனலாம்.
இது வெறும் மிகையில்லை.

இத்தியாகச் செம்மல்களின் இழப்புகள் அனைத்தும் மீட்டெடுத்துத் தரப்படவேண்டும்!
இதுவே நம் முன் உள்ள தலையாயக் கடமையாகும்.  போராட்டக்காலக்கோரிக்கைகள் அனைத்திற்கும் அரசாணை பெறப்படுவதற்கான இயக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.
இவைகளே!இக்காலவரையற் ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும் செலுத்தும் வீரமிகு-பெருமைமிகு அஞ்சலியாகும்!
இத்தியாகிகளின் குடும்பத்தினரின் பெருந்தியாகத்திற்கு  செலுத்தும் நன்றிகடனாகும்;பெரும்மரியாதையாகும்!
#சங்கநாதம் முழங்கட்டும்!
-முருகசெல்வராசன்.

மாண்பமை.நீதியரசர் தலைமையிலான குழுவின் அழைப்பு ~ வரவேற்பும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் கொள்கிறது...


தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயத்தின்  கோரிக்கைகளை குறிப்பாக இடைநிலை சாதாரணநிலை ஆசிரியர்களின் மத்தியரசுபள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்  எனும் கோரிக்கையை மாண்பமை. நீதியரசர் தலைமையிலான குழுவின் முன்
தக்க வாதங்களை
முன் வைத்தும், எடுத்துரைத்தும்,விளக்கியும்
பொதுச்செயலாளர், முன்னாள் சட்டமேலவை உறுப்பினர் பாவலர்.திரு.க.மீ., அவர்கள் வலியுறுத்துவார்கள்.

தமிழக அரசிடம்
இக்குழு ஆசிரியர் கோரிக்கைகளின்
நியாயங்களை  ஏற்றுக்கொண்டு பரிந்துரைக்கும்
என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் நம்புகிறது. -முருகசெல்வராசன் .

புதன், 22 ஜனவரி, 2020

தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில , மாவட்ட , ஒன்றியப் பொறுப்பாளர்கள் இராசிபுரம் ஒன்றிய குழு பெருந் தலைவர் திரு. ஜெகநாதன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று (22.01.2020) மாலை சந்தித்தனர். தனக்கு வாழ்த்து கூறிய ஆசிரியர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்த அவரின் பண்பாடு கண்டு மகிழ்கிறோம், வாழத்துகிறோம்
















தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.இராஜேந்திரன் அவர்களை (இராசிபுரம்) மரியாதை நிமித்தமாக இன்று (21/01/2020) மாலை 5.00 மணிக்கு சந்தித்தனர்.










ஊதிய குறைபாடு நிவர்த்தி செய்ய உச்சநீதிமன்ற ஆணையின்படி நியமிக்கப்பட்ட நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு அழைப்பு


SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை விவரம்...

தொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (திருத்தம்) சட்டம், 2019 - மாநிலப்பாடத்திட்டத்தினைப் பின்பற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துதல் -* *அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து. தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்...






மதிப்பெண் மட்டுமே எல்லாம் ஆகிவிடாது ~ மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை…

ஜனவரி 22, வரலாற்றில் இன்று.

ஆப்பிள் கணினி அறிமுகம் செய்யப்பட்ட தினம் இன்று.

1984ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ஆப்பிள் மக்கின்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.