ஞாயிறு, 3 மே, 2020
மே 3, வரலாற்றில் இன்று.
இந்தியாவின் 3-வது குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான ஜாகிர் உசேன் (Zakir Husain) நினைவு தினம் இன்று.
# ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் (1897) பிறந்தார். இவரது ஆரம் பக் கல்விக்குப் பிறகு, குடும்பம் உத்தரப் பிரதேசத்துக்கு குடிபெயர்ந்தது. தந்தை பிரபல வழக்கறிஞர். 10 வயதில் தந்தையும் அடுத்த 4 ஆண்டுகளில் தாயும் இறந்தனர்.
# சுய முயற்சியால் படித்தவர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அங்கு படித்த போது, காந்தியடிகளின் தீவிர ஆதரவாளராக மாறினார். அவரது ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்தது.
# தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய ஆசிரியர்கள், மாணவர்கள் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். அலிகாரில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், 1920-ல் டெல்லிக்கு மாற்றப் பட்டது. ஜமியா மில்லியா இஸ்லாமியா எனப் பெயர் மாற்றப்பட்டது.
# ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1927-ல் நாடு திரும்பியவர், மூடப்படும் நிலையில் இருந்த தேசிய முஸ்லிம் பல்கலைக்கழக தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவரது சீரிய தலைமையில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் இங்கு பணி புரிந்தார்.
# சுதந்தரப் போராட்ட இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். காந்தியடிகள், ஹக்கீம் அஜ்மல்கான் வலியுறுத்திய நெறிசார்ந்த கல்வித் திட்டத்தை சோதனை முறையில் இந்த பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தினார்.
# இந்தி, உருது, ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராகத் திகழ்ந்தார். ஆதாரக் கல்வி முறை, கல்வி வளர்ச்சி குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். பிளேட்டோவின் ‘ரிபப்ளிக்’ நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
# இவர் ஜமியா மில்லியா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, மாணவர்கள் தூய்மையாக கல்லூரிக்கு வருவதை வலியுறுத்தினார். ஆனாலும், மாணவர்கள் அழுக்கு ஷுவுடன் வருவது வழக்கமாக இருந்தது. ஒருநாள், கல்லூரி வாசலில் பிரஷ், பாலிஷுடன் நின்றுகொண்டார். அழுக்கு ஷுவுடன் வந்த மாணவர்களிடம், ‘காலைக் காட்டு. நான் பாலிஷ் போடுகிறேன்’ என்றார். வெட்கம் அடைந்த மாணவர்கள் இனி அழுக்கு ஷுக்களுடன் வருவதில்லை என உறுதியேற்றனர்.
# காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்துக்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.
# 1956-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பிஹார் ஆளுநராகப் பதவியேற்றார். 1962-ல் குடியரசு துணைத் தலைவராகவும், 1967-ல் 3-வது குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்’ என்று கூறியவர்.
# கல்வித் துறையில் இவரது பங்களிப்புகளுக்காக 1954-ல் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. டெல்லி, கல்கத்தா, அலகாபாத், அலிகார், கெய்ரோ பல்கலைக்கழகங்கள் இலக்கிய மேதை பட்டம் வழங்கின. 1963-ல் பாரத ரத்னா விருது பெற்றார். நவீன இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவரான ஜாகிர் உசேன் 72-வது வயதில் (1969) மறைந்தார்.

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் இன்று.
உலகின் ஒவ்வொரு நாட்டிலும் அரசியல், தற்காலச் சமூகத்தின் நிலை, அறிவியல், அரசின் செயல்பாடு, கலாச்சாரம், வியாபாரம், விளையாட்டு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தேவைகள் உள்ளிட்ட அனைத்து துறைகள் சம்பந்தமாகவும் உண்மையான நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை பொறுப்புணர்வுடன் வெளியிடவும், சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமைக்கான பத்திரிக்கை சுதந்திரத்தினை காப்பதற்கும் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1986-ஆம் ஆண்டு கொலம்பிய பத்திரிக்கையாளர் கிலெர்மோ கானோ என்பவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலைப்பற்றி எழுதியதற்காக கொலை செய்யப்பட்டார். இதன்பின் ஐக்கிய நாடுகள் சபையில் உலக நாடுகளின் பத்திரிக்கை சுதந்திரத்தை காக்கும்விதமாக மே-3 ஆம் நாளினை உலக பத்திரிக்கை சுதந்திர நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் யுனெஸ்கோ அமைப்பு உலகில் சிறந்த பத்திரிக்கை எழுத்தாளருக்கான விருதினை வழங்கி கௌரவிக்கிறது.

சனி, 2 மே, 2020
பள்ளிகள் கட்டண வசூலுக்கு க்ரீன் சிக்னல்!
பத்தாம் வகுப்புத் தேர்வு நடக்கவில்லை; ப்ளஸ் டூ ரிசல்ட் வரவில்லை; புதிய அட்மிஷனும் போட முடியாது; இருக்கிற மாணவர்களிடம் கட்டணமும் கேட்க முடியாது என்கிற நிலையில் கல்வித் துறையின் முக்கியப் புள்ளியிடமும் கோட்டை நிர்வாகியிடமும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சந்தித்து தங்கள் குறைகளைக் கொட்டியிருக்கிறார்கள். கூடவே ஒரு பள்ளிக்கு இவ்வளவு எனச் சொல்லி `படியளந்தும்’ விட்டார்களாம்.
இதனால், `ஆன்லைன் மூலம் பள்ளிகள் அட்மிஷன் போட்டுக்கொள்ளலாம். படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடம் இந்தாண்டுக்கான கட்டணத்தை வசூல் செய்யலாம்’ என்று உத்தரவு வரப்போகிறதாம். கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசின் செயல்பாட்டைப் பாராட்டி தனியார் பள்ளிகள் சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
எப்படியெல்லாம் சம்பாதிப்பது என்பதைச் சொல்லிக்கொடுப்பதற்கு இவர்களே ஒரு பள்ளிக்கூடம் திறக்கலாமே என்று சத்தமின்றிச் சிரிக்கிறார்கள் பள்ளி நிர்வாகிகள்.
-கழுகார், ஜூனியர் விகடன்

பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கிடும் அனைத்து
ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் விடுபடுதல் இன்றி தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்!அனைத்துப்பள்ளிகளிலும் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கும் மாதாந்திர ஊதியம் மற்றும் மாதாந்திர தூய்மைப்பொருள்களுக்கான தொகை இ்டையீடின்றி வழங்கப்படவேண்டும்!
பரமத்தி ஒன்றியத்தில் 12 சத்துணவு எடுப்புப்பள்ளிகளுக்கு தூய்மைப்பணியாளர் ஊதியம் கிடையாது என்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆட்சேபிக்கிறது. மேற்கண்ட 12 சத்துணவு எடுப்புப்பள்ளிகளின் தூய்மைப்பணிகளை மேற்கொள் வது யார்!? என்று வினா எழுவதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சுட்டிக்காட்டுகிறது.
நாமக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை உதவி இயக்குநரிடம் தமிழ்நாடு தொடக கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் ,பரமத்தி ஒன்றிய அமைப்பு வலியுறுத்திக் கோருகிறது!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)