ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

தமிழ்நாட்டின் அனைத்தாசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு எதிர்வரும் 04.10.18 (வியாழன்) அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்...

அன்பானவர்களே!
வணக்கம்.
தமிழ்நாட்டின் அனைத்தாசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின்  கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி  ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு எதிர்வரும் 04.10.18(வியாழன்) அன்று  ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொள்வதென முடிவாற்றி தற்செயல் விடுப்பு போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு  வேண்டுகோள்
விடுத்துள்ளது.

ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளையும்,தொடர்போராட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசின் மேலான கவனத்திற்கு  முறையாக ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு   கொண்டுச்சென்றுள்ளது.
இதையொட்டி 
தமிழக அரசு ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திடமுன்வரும் எனும் எதிர்பார்ப்பு எழுந்தது. 
ஆனால் தமிழக அரசோ பாராமுகம் காட்டியதோடு நில்லாமல் ,
முறையான விடுப்பை  அனுமதிக்கப்படாத விடுப்பென்று பெயர்சூட்டி
 "நோ ஒர்க்,நோ பே " எனும் மிரட்டல் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

கடந்தகாலப்
போராட்டங்களில்  தமிழ்நாட்டின் சிறைகளை 
எல்லாம் நிரப்பியும்,
பணிநீக்கம்,
தற்காலிகபணிநீக்கம்,
ஒழுங்கு நடவடிக்கைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் ,
தொலைதூர 
இடமாறுதல்கள்  போன்ற அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் போன்றனவற்றை  எல்லாம் துச்சமென தூக்கி எறிந்தும்,
உயிர்தியாகம் உள்ளிட்ட சர்வபலி தியாகங்களை ஈந்தும்,
எசுமா மற்றும் டெசுமா போன்ற கறுப்புச்சட்டங்களை நேருக்குநேர் சந்தித்து  முறியடித்தும் ,
குதிரைப்படையின் கொக்கரிப்புகளை,
துப்பாக்கிக்குண்டுகளின் சீற்றங்களை  நேருக்கு நேர் சந்தித்து வீழ்த்தியும்
மத்திய ஊதியம்,
பயன்தரும் ஓய்வூதியம்,
பணிசார்ந்த உரிமைகள் போன்றவற்றை பெற்றும்,காத்தும் இன்று வரை அனுபவித்து வரும் உன்னத நிலையை  அடைந்துள்ளோம் என்பதை நினைவுகூர்ந்தும்,
மனதில் நிலைநிறுத்தியும் ஒரு கம்பீரமான போராட்டவரலாற்றின் சொந்தக்காரர்கள் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு
அலுவலர்கள் என்ற பெருமிதத்தோடு அக்டோபர் 4இல் களமாடுங்கள்
என்றே வேண்டுகிறேன்.

 மத்திய ஊதியத்தை பறித்துக்கொண்டு,
பயன்தரு ஓய்வூதியமுறையை பறித்துக்கொண்டு,
பணிசார் விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு 
பல இலட்சரூபாய்களை ஆண்டு ஒன்றுக்கு  வஞ்சித்துவிட்டு 
ஒருநாள் ஊதியம்பிடிப்பேன்
என்று அறிவித்தால், அடங்கிஒடுங்கிப்
போவேனா!?என்று மனதுக்குள் 
வினா எழுப்பி அடங்கிடமாட்டேன்...என்றுரைத்து...
சூளுரை ஏற்று ... உறக்கம் கலைந்த சிங்கங்களைப்போல 
எழுக!
பெரும்படை நடத்துக!
என்றே வேண்டுகிறேன்.

தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் ,ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்,ஆசிரியர்இனக்காவலர்,
பாவலர் க.மீ .,அய்யா அவர்களின் அறைகூவல் ஏற்று ஆசிரியர் மன்றத்தின்   நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,
ஒன்றியப்
பொறுப்பாளர்கள் ஒன்றிய அளவில் கூட்டாக ஆசிரியப் பெருமக்களை இல்லந்தோறும் சென்று சந்தித்து பேசுங்கள்!
ஒட்டுமொத்த
தற்செயல்விடுப்புபோராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்கச்செய்யுங்கள்!
சமூக ஊடகங்களை
பயன்படுத்தி பரப்புரை செய்து போராட்டத்திற்கு வலிமையைத்தேடித்தாருங்கள்!
ஜாக்டோ-ஜியோவின் தொடர்போராட்டங்கள் முழுவெற்றிபெற்றிட  முன்னிலையில் செயல்படுங்கள்!
நாம் வெல்வோம் எனும் நம்பிக்கையோடு போராட்டக்களத்தில் செயலாற்றுங்கள்!
நாளை நமதே!!!
நன்றி.
~முருகசெல்வராசன்

பண்டிகை முன்பணம் கோரும் படிவம்...

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய ஆங்கில வார்த்தைகளின் தொகுப்பு - தமிழ் விளக்கத்துடன்...

தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் விகிதாச்சாரப்படி பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல்...

2019 ஜனவரி 8,9 ம்தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்


மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள் -- திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவர், மாணவிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் கு. ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
இமாசல பிரதேசம், குலுமணாலி பகுதிக்கு அண்மையில் சுற்றுலா சென்ற திருச்சி காட்டூர் தனியார் பள்ளி மாணவர்கள் 32 பேர் மழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். இருப்பினும் அவர்கள் பத்திரமாக சொந்த ஊர் திரும்பினர். இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கூறியது:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளில் இருந்து கல்விச் சுற்றுலா செல்வதற்கு முன் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் ஒரு மாதத்துக்கு முன்பே உரிய முன் அனுமதி பெற வேண்டும். நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. பெற்றோரின் அனுமதி அவசியம்.  மேலும், சுற்றுலா செல்லும் இடத்தை குறிப்பிட்டு பெற்றோரின் ஒப்புதல் கையெழுத்து இல்லாமல் அழைத்துச் செல்லக் கூடாது.
பாதுகாப்பு இல்லாது விபரீதம் ஏற்படும்போது பள்ளி நிர்வாகம் மட்டுமல்லாது கல்வித் துறையும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, அனைத்து வகை பள்ளிகளும் சில நிபந்தனைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
சுற்றுலா செல்லும் நாளுக்கு 2 மாதங்களுக்கு முன்பே முறையான திட்டமிடல் வேண்டும். பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெற வேண்டும். சுற்றுலா அவகாசம் 4 நாளுக்கு மேல் இருத்தல் கூடாது. பருவநிலை, வானிலை அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே திட்டமிட வேண்டும். சுற்றுலா செல்லும் நாள், இடம், வாகனம் திட்டமிட்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நாள்தோறும் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பாதுகாப்பாளராகச் செல்ல வேண்டும்.  கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதைத் தடை செய்ய வேண்டும்.
பேருந்துகளில் சென்றால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்து பயணத்தை தவிர்க்க வேண்டும். அனுபவமுள்ள ஓட்டுநரை நியமிக்க வேண்டும். முதலுதவி மருந்துகளும் அவசியம். மாணவர்களை எக்காரணத்துக்காகவும் தனியே அனுப்பக் கூடாது. அவ்வப்போது மாணவர் எண்ணிக்கையைச் சரிபார்த்து ஒரு இடத்தில் இருந்து நகர வேண்டும்.
கல்வி சார்பான சுற்றுலாவாக இருத்தல் வேண்டும். லாப நோக்கத்துடன் இருத்தல் கூடாது. பெற்றோர்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் அளிக்கக் கூடாது. முன்அனுபவமுள்ள சுற்றுலா வழிகாட்டியை அழைத்துச் செல்ல வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்

ஆசிரியர்களுக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான அறிவிப்புகளை மத்திய- மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும் ~~ பாவலர் அய்யா திரு.க.மீனாட்சிசுந்தரம் அறிக்கை


3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம் SSA ~~ 15 மாணவர்கள் இல்லாத பள்ளிகள் மூடல்

சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்தில்  15  மாணவர்களுக்கும் குறைவான  எண்ணிக்கையில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளுக்கு அரசின் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.

+1மற்றும் +2 வகுப்பில் சில பாட பெயர்கள் மாற்றம் - தேர்வுத்துறைக்கு பள்ளி கல்வித்துறை பரிந்துரை

மாணவர்களின் உயர்கல்வி வசதிக்காக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், பல்வேறு பாடங்களின் பெயர்களை மாற்றி, சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறைக்கு, பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது

மாணவர்களின் கற்றல் அடைவுநிலை மதிப்பீடு 2018-19-BRTE பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்...

சனி, 29 செப்டம்பர், 2018

அக்டோபர் 2018 மாத பள்ளிகல்வித்துறை நாட்காட்டி



பகுதி நேர ஆசிரியர் மாறுதல் மற்றும் படிவம்

தமிழ் புதிய வார்த்தைகள்

கூகுளின் தொழில்நுட்பமும், தனிநபர் தகவல் பாதுகாப்பின் எதிர்காலமும்.!


கலிபோர்னியாவில் நடைபெற்ற கூகுள் நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்குநர்களுக்கான 2018ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில், அதனுடைய தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மிகவும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பங்கள் சிலவற்றை வெளியிட்டார்.

2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல் கற்பித்தல் இரண்டாம் பருவ ஆசிரியர் கையேடு


பள்ளிக்குழந்தைகளுக்கு 8ம் வகுப்பு வரை பள்ளிப் புத்தக பை வகுப்பு வாரியாக எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பது குறித்தும், முதலிரண்டு வகுப்புகளுக்கு வீட்டு பாடம் கொடுப்பதை இரத்து செய்வதும் குறித்தும் மெட்ரிக்குலேசன்பள்ளி இயக்குனரின் செயல்முறைகள்.



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பணம் ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க கோரிக்கை


பண்டிகைக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ .5,000 ரூபாய் விழா முன்பணமாக வழங்கப்படும்.மாதம் ரூபாய் 500 வீதம்பிடித்தம் செய்யப்படும் . தற்போது  விலைவாசி உயர்வு  காரணமாக விழா முன்பணம் ரூ 5000 லிருந்துரூ .15,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Bonus_salary_ ceiling - raise_ 7000/- to 21000/-



விண்கல்லில் தரையிறங்கி சாதனை...

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி...

15 லட்சம் மாணவர்களுக்கு அதிநவீன லேப்டாப்


DSE -- அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழி மற்றும் மொழி வழி சார்ந்த முதுகலையாசிரியர் பதவி உயர்வு -உத்தேசபெயர் பட்டியல் தயாரித்தல் -விவரங்கள் கோருதல் சார்பாக





IFHRMS Guide in Tamil - விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள Online சம்பள பட்டியலை தயாரிக்கும் முறை குறித்த படிப்படியான விளக்கம் தமிழில்...

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

TAMILNADU OPEN UNIVERSITY - 2019 B.Ed ADMISSION NOTIFICATION - DISTANCE MODE ( Last Date : 30.11.2018 )


Periodical assessment 2018-2019 Tools...

6,9 ம் வகுப்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடம் ~கல்வி அமைச்சர்


Periodical Assessment 2018 - 19 வாசித்தல் மற்றும் எழுதுதல் தரநிலைகள் ( Grade )...

ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட விபரத்தினை அறிய...

திருவாரூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்- திருவாரூர் மாவட்டம் - இரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என்பது தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டுதல் செயல்படுத்துதல்-தொடர்பாக...

DSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்மேலாண்மை - நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களால் ஏற்படும் தீமைகளை தடுக்கும்பொருட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்-தொடர் நடவடிக்கை - சார்ந்து



LKG முதல் +2 வரை ஒரே பள்ளி -- தமிழக அரசின் புதிய திட்டம்..

ஒரே காம்பவுண்டுக்குள் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் வகையில் முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்று வீதம் பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


 தமிழகம் முழுவதும் அரசு, அரசு நிதியுதவி, சுயநிதி பள்ளிகள் எனமொத்தம் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.



வியாழன், 27 செப்டம்பர், 2018

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம்--துறைத்தேர்வுகள் டிசம்பர் 2018~அறிவிப்பு


அரசு /அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் அடைவு தேர்வு ஆய்வு 03/10/2018 முதல்.....



ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளுக்கும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு: அமைச்சர் செங்கோட்டையன்


ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளுக்கும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஒரு வாரத்தில் அதற்கான விழிப்புணர்வு பணிகள் தொடங்கப்படும்.
மேலும் பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கான கையேடும் வழங்கப்படும். மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் வீதம் 320 பள்ளிகளுக்கு முதல்கட்டமாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.
ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு செய்யப்படும். விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார் எதற்கு தேவை, எதற்கு தேவையில்லை...

தமிழகம் முழுவதும் விஜயதசமியையொட்டி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை-ஏற்பாடுகளை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு...

அனைவருக்கும் 50 MB வேக இணைய சேவை -புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு ஒப்புதல்...

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யலாம்~~உச்ச நீதிமன்றம்


இரண்டாம் பருவ புத்தகங்கள் தயார் ~அக்-3ல் வழங்கப்படும்

*இரண்டா பருவ பாடநூல்கள்  தயார்:
 அக்., 3ல் வினியோகம்*#

புதிய பாடத் திட்டத்தில் தயாரான,
இரண்டாம் பருவ புத்தகங்களை, அக்., 3ல், மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மூன்று பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. காலாண்டு தேர்வு வரை, முதல் பருவம்; அரையாண்டு தேர்வு வரை, இரண்டாம் பருவம்; ஆண்டு இறுதி தேர்வுக்கு, மூன்றாம் பருவம் என, மூன்று புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பருவ புத்தகமும், அந்தந்த பருவ தேர்வுடன் முடித்துக் கொள்ளப்படும்.

தமிழக கல்வியில் தரம் இல்லை --CBSE குற்றச்சாட்டு


பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பு இல்லை --கல்வி அமைச்சர்


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை...

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ப்படுகின்றனர். தமிழ்நாட்டின் காலிப்பணியிடங்களின் பட்டியல்...

புதன், 26 செப்டம்பர், 2018

பள்ளிக்கல்வி - பாரதியார் தின / குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்!!



Flash News : 1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு!

அரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை

அனைவருக்கும் கல்வி’ திட்டமும் (எஸ்எஸ்ஏ), மத்திய இடைநிலை கல்வி திட்டமும் (ஆர்எம்எஸ்ஏ) இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் (சமக்ர சிக்சா அபியான்-எஸ்எஸ்ஏ) என்ற பெயரில் நடை முறைப்படுத்தப்படுகிறது

தமிழகத்தில் இதுவரை தனித்தனி
திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வந்த ‘அனைவருக்கும் கல்வி’ திட்டமும் (எஸ்எஸ்ஏ), மத்திய இடைநிலை கல்வி திட்டமும் (ஆர்எம்எஸ்ஏ) இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் (சமக்ர சிக்சா அபியான்-எஸ்எஸ்ஏ) என்ற பெயரில் நடை முறைப்படுத்தப்படுகிறது.

ஆதார் எங்கு அவசியம்.. எங்கு அவசியம் இல்லை.. முழு விபரம்!

டெல்லி: ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஆதார் பல முக்கியமான விஷயங்களுக்கு அவசியம் இல்லாமல் போய் இருக்கிறது.

DSE PROCEEDINGS-School Education-Banning of homework-Upto 2nd Std.-Children School Bags(Limitation on Weight) Bill 2006-orders issued-Reg-உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது