ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் -பொதுச்செயலாளர் திரு.க. மீனாட்சிசுந்தரம் Ex.MLC, அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
பரமத்தி  ஒன்றியம் (கிளை)
நாமக்கல் மாவட்டம்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் -
பொதுச்செயலாளர் 
திரு.க. மீனாட்சிசுந்தரம் Ex.MLC,  அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பரமத்தி  ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு  இன்று (15.08.2020) முற்பகல் 10.45 மணியளவில் ஒன்றியத் தலைவர் இயக்கக் கொடியினை ஏற்றி வைத்து விழாவிற்கு தலைமை வகித்தார்.ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் வரவேற்புரையாற்றினார்.தொடர்ந்து பாவலர் அய்யாவின் திருவுருவப்படத்திற்கு ஒன்றிய/மாவட்ட/மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் பங்கேற்ற அனைவரும் மரியாதை செலுத்தினார்கள்.90 பேருக்கு முகக்கவசம் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 15 மாதங்களாக சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் பள்ளிகளின் தூய்மைப்பணியாளர் உள்ளிட்ட 30 பேருக்கு நலத்திட்டமாக 
தூய்மை பணியாளர்களை கௌரவப்படுப்படுத்தும் வகையில் உணவுப்பைகளை(அரிசி,பருப்பு,புளி,முகக்கவசம்,கபசுர சூரணம்) *பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எச்.மூர்த்தி* அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் ஊதியம் பெற்றுத்தர நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பேசி ஆவன செய்வதாக பரமத்தி ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்களிடமும்,நலத்திட்டம் பெற்ற ஊராட்சி ஒன்றிய சுகாதாரப் பணியாளர்களிடம் உறுதியளித்தார். *மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்* அவர்கள் இயக்கவுரையாற்றினார். *மாநிலச் செயலாளர் திரு.முருக செல்வராசன்* அவர்கள் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு மரியாதை செய்து இயக்கப் பேருரையாற்றினார்.இவ்விழாவில் திமுக பேரூர் கழகச் செயலாளர் திரு.ரமேஸ் பாபு அவர்கள்,வார்டுச் செயலாளர் திரு.நாச்சிமுத்து,திரு.கணேசன்,திரு.காமராஜ், திரு.M.பாலுசாமிஉள்ளிட்ட திமுக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீசு,மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.தண்டபாணி ,கபிலர்மலை ஒன்றியத் தலைவர் திரு.ந.மணிவண்ணன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார்,கபிலர்மலை ஒன்றிய துணைச் செயலாளர் திரு.மணிகண்டன்,பரமத்தி ஒன்றியத்தினைச் சேர்ந்த மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர், இலக்கிய அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்,ஒன்றிய துணைத் தலைவர்கள்,துணைச் செயலாளர்கள்,மற்றும் உறுப்பினர்கள் நலத்திட்ட பயனாளிகள் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

நிறைவாக ஒன்றியப் பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி நன்றியுரையாற்றினார்.


க.சேகர்.
ஒன்றியச் செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக