சனி, 30 நவம்பர், 2019

நவம்பர் 30,
வரலாற்றில் இன்று.


முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் நினைவு தினம் இன்று.


இந்தியாவின் 15ஆவது பிரதமராக பதவி வகித்தவர் இந்தர் குமார் குஜ்ரால்.

 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மந்திரி சபையில் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.

பின்னர் காங்கிரசில் இருந்து வெளியேறி 1980இல் ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். 1989ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட குஜ்ரால் 1989-90 மற்றும் 1996-98களில் வெளியுறவுத்துறை மந்திரியாகவும், இதே ஆண்டில் திட்டக் கமிஷன் தலைவராகவும் பதவி வகித்தார்.

21.4.1997 முதல் 19.3.1998 வரை இந்திய பிரதமராக பதவி வகித்தார்.
நவம்பர் 30,
வரலாற்றில் இன்று.

கம்ப்யூட்டர் பாதுகாப்பு தினம் இன்று.

ஆண்டு தோறும் நவம்பர் 30 ஆம் தேதி,  கம்ப்யூட்டர் பாதுகாப்பு தினம்(COMPUTER SECURITY DAY, November 30) ஆக அனுசரிக்கப்படுகிறது

இந்தத் தினம் கொண்டாடுவது முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் தினத்தில் கம்ப்யூட்டர் தொடர்பான விழிப்புணர்வு பொது மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் பாதுகாப்பு மற்றும் அதிலுள்ள தகவலுக்கான பாதிப்பு குறித்து இந்தத் தினத்தில் அலசி ஆராயப்படுகிறது.

உலகம் முழுக்க சுமார் 1500க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் சாஃப்வேர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தத் தினத்தை கொண்டாடுகின்றன. இந்தத் தினம் சனி அல்லது ஞாயிறு அல்லது விடுமுறை தினத்தில் வந்தால் அது அதற்கு அடுத்த பணி நாளில் கொண்டாவது வழக்கமாக இருக்கிறது.


 அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றுவது, கம்ப்யூட்டரை தூசி படியாமல், சூடாகாமல் பாதுகாப்பது, வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாப்பது, தேவையில்லாத ஃபைல்களை நீக்குவது, கம்ப்யூட்டர் அருகில் மது மற்றும் புகை பிடிப்பதை தவிர்ப்பது, இவையே இத்தினத்தில் நாம் செய்ய வேண்டியது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்




























தொடக்கக் கல்வி இயக்குனர் மாற்றம் - திரு.பழனிசாமி புதிய தொடக்க கல்வி இயக்குனர் ஆக பதவி ஏற்பு


வெள்ளி, 29 நவம்பர், 2019

வெண்ணந்தூர் ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சொசைட்டியின் துணை தலைவரை தகுதி நீக்கம் செய்ய நாமக்கல் சரகம் துணை பதிவாளருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்-நாமக்கல் மாவட்ட கிளை கோரிக்கை

அன்பானவர்களே! வணக்கம்.
வெண்ணந்தூர் ஒன்றிய பணியாளர் மற்றும்  ஆசிரியர் கூட்டுறவு  கடன் சங்கத்தில் அடிப்படை உறுப்பினராக தொடரவே உரிமை அற்றவர் ,
துணைத்தலைவராக தொடர்கிறார். கூட்டுறவு சங்கத்தின் , திட்டங்களை, அமைப்பு விதிகளை ஏற்றுக்கொண்டு மதித்து நடந்து கொள்ள வேண்டியவரே பதவி ஆசையில்    சட்டதிட்டங்களை நசுக்குகிறார். சட்டபடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கூட்டுறவு அலுவலர்களே! விழித்தெழுங்கள்! என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்-நாமக்கல் மாவட்ட கிளையின் சார்பில் திருச்செங்கோடு சரகம் துணை பதிவாளருக்கு கோரிக்கை மனு

*அன்பானவர்களே!வணக்கம்.*
*கபிலர்மலை ஒன்றிய  பணியாளர் மற்றும் ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கத்தின் மகாசபை கூட்டத்தில் நிர்வாகக்குழுவின் தலைமைப் பொறுப்பு வகிப்போர் மேற்கொண்ட    முறையற்றச் செயல்களை  கண்டித்திடுக!*
முறையற்றச்
செயல்பாடுகளில் தலையீடு செய்து முறைப்படுத்திடுக!  ஜனநாயகமா!?
அது, கிலோ என்னவிலை?!
அது எங்கே கிடைக்கும்?!என்று ஏளனம் பேசும்  நடத்தைகளை சீர்ப்படுத்திடுக! *கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வலியுறுத்துகிறது.*
நவம்பர் 29,
வரலாற்றில் இன்று.


இந்திய தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (1993).

ஒரு மனிதனின் கனவுகள் ஒரு தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஜே.ஆர்.டி.டாடா.

இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார்.


இந்தியாவில் அரை நூற்றாண்டு காலத்தில் பல தொழில்களை உருவாக்கி அரசங்கத்திற்கு அடுத்தபடியாக வேலை வாய்பை உருவாக்கி தந்தவர். இந்தியர்கள் அனைவரும் டாடா என்ற நிறுவனத்தின் பெயரை கூற வைத்தவர். தொழில் துறையில் ஜே.ஆர்.டி.டாடா என்ற பெயரை கூறினால் அனைவரும் எழுந்து நிற்பர்.
அத்தகைய மரியாதை தொழில் துறையில் அவர் பெற்றிருந்தார்.


1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. தான்.


பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் சொன்ன வரிகள் - ”இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக வேண்டாம் ;இந்த நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்வோடு, தன்னிறைவோடு வாழ்கிற தேசமாக இந்த பூமி ஆனால் போதும் !”
நவம்பர் 29,
வரலாற்றில் இன்று.


 தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த அம்ரித்லால் விட்டல்தாஸ் தக்கர் பாபா பிறந்த தினம் இன்று.

இவர் 1869ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி குஜராத் மாநிலம் பாவ்நகரில் பிறந்தார்.

இவர் ஷோலாப்பூர், பாவ்நகர், போர்பந்தர் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே பொறியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்பு இவர் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் 1900இல் உகாண்டா நாட்டுக்கு சென்றார்.

பின்பு தாயகம் திரும்பியதும், சாங்லி நகரில் ரயில்வே தலைமைப் பொறியாளர் வேலை கிடைத்தது. அப்போது கோபாலகிருஷ்ண கோகலே மூலம் மகாத்மா காந்தியின் அறிமுகமும் கிடைத்தது


 தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் விடிவெள்ளியாக இருந்து, அவர்களது குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார்.

"தாழ்த்தப்பட்ட, ஆதிவாசி மக்களுக்காக பாபா சேவையாற்றியதுபோல என்னால்கூட தொண்டு செய்ய முடியவில்லை. பாபாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் காந்திஜி.

தீண்டாமையை ஒழிக்க வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட தக்கர் பாபா 82ஆவது வயதில் (1951) மறைந்தார்...
நவம்பர் 29,
வரலாற்றில் இன்று.

நாசாவின் மெர்க்குரி
அட்லஸ் 5 விண்கலத்தில் சிம்பன்சி
ஒன்றை ஏற்றி விண்ணுக்கு அனுப்பிய தினம் இன்று (1961).

இது பூமியை இரு தடவைகள்
சுற்றிவந்து
புவேர்ட்டோ ரிக்கோவில்
இறங்கியது.
நவம்பர் 29,  வரலாற்றில் இன்று.

 தன் நடிப்பால் சிரிக்கவும் சிந்தக்கவும் வைத்த என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று(1908).

என்.எஸ். கிருஷ்ணன் தமிழ் சினிமாவின் நாகரிகக் கோமாளி சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதை தூவியவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!.