வியாழன், 31 ஜனவரி, 2019
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கவனத்திற்கு...
ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூடி வேலைநிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்போர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டோர், தற்காலிக பணிநீக்கத்தில் இருப்போர்,ஜாமீனில் விடுவிக்கப்பட்டு பணியில் சேராதோர் மேலும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டோரின் சம்பந்தமான விபரங்கள், பணிநீக்க ஆணை முதலியவற்றை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட (எதுவும் விடுபடாமல்)அனைத்து விபரங்களையும் சேகரித்து உடனே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளாருக்கும் விரைவு தபாலில் உடன் அனுப்பி வைக்கவும்...
காலை 11மணிக்குள்
ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்கு தொடர்பான பணிநீக்கம் தொடர்பான ஆணை நகல் மற்றம் நடவடிக்கை தொடர்பான நகல்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் அவர்களின் Whatsapp எண்ணிற்கு உடன் அனுப்பவும்...
இவண்
க.மீனாட்சிசுந்தரம்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
மாநில ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ ஜியோ.
ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது...
மாணவர்கள் நலன்கருதியும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்கவும், மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் , அனைத்துக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோளுக்கிணங்கவும், நீதிமன்ற அறிவுறுத்தலின் படியும் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான துறைரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்துசெய்து, ஜனவரி 21 அன்று இருந்த நிலையே தொடர தமிழகஅரசுக்கு வேண்டுகோள்விடுக்கிறோம்.
மேலும் 9 நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அரசூழியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
~பாவலர் க.மீனாட்சி சுந்தரம் Ex.MLC,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
புதன், 30 ஜனவரி, 2019
செவ்வாய், 29 ஜனவரி, 2019
திங்கள், 28 ஜனவரி, 2019
ஜாக்டோ - ஜியோ தலைவர்களை விடுதலை செய்து உடனடி பேச்சுவார்த்தைக்கு அழைத்திடுக~இரா.முத்தரசன்...
ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் 22.01.19 முதல் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் மிகுந்த எழுச்சியுடன், நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் 100 சதவிகிதம் மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.
தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு பாடம் நடத்திட அரசு முயற்சி செய்வது பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவாது. எனவே, உடனடியாக போராட்டக்குழு தலைவர்களை, முதல்வர் அழைத்துப் பேசி விரைந்து தீர்வு காண்பது ஒன்றே, ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பி அரசு செய்முறைத் தேர்வுகளை நடத்திட உதவியாக அமையும்.
இரவு, மாவட்ட, மாநில போராட்டக்குழு தலைவர்களையும், ஏராளமான முன்னணி ஆசிரியர்களையும், கைது செய்து சிறையில் அடைத்திருப்பது, போராட்டத்தை தீவிரப் படுத்தியுள்ளது. அதுவும், பள்ளிகளில் குடியரசு தின விழாவை மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடுவதை சீர்குலைக்கும் அளவுக்கு விழாவின் முதல் நாள் இரவு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிப்பதோடு, அரசு உடனடியாக ஜேக்டோ-ஜியோ போராட்டக் குழு தலைவர்களை விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்.
ஞாயிறு, 27 ஜனவரி, 2019
பழைய ஓய்வூதியத்தை தருவதாகக் கூறினால் உடனே பணிக்கு திரும்பத் தயார் ~ ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்…
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.
ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்றது.
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்வது தவறான முன்னுதாரணம்.28-ம் தேதி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். உயர்நீதிமன்றம் செல்லவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை கவுரவம் பார்க்காமல் அழைத்துப் பேசுங்கள் ~ முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்…
''2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 51 ஆசிரியர் சங்கங்கள், 114 அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், பல்வேறு கட்டங்களாக இன்றோ நேற்றோ அல்ல, கடந்த 22 மாதங்களுக்கும் மேல் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு போராட்டங்களை அறிவித்து உரிய பலனில்லாத காரணத்தால் கடந்த 22-ம் தேதியிலிருந்து மீண்டும் அமைதியான முறையில் காலவரையற்ற அறவழிப் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினைச் சேர்ந்த நிர்வாகிகளை மாவட்டந்தோறும் நள்ளிரவில் கைது செய்யும் அதிமுக அரசின் அராஜக-அடக்குமுறை நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போராட்டக்களத்தில் இருக்கும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தகுந்தபடி பரிசீலனை செய்வதற்குப் பதில், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது, பணி நீக்கம் செய்வோம் என்று மிரட்டுவது போன்ற போராட்டத்தை மேலும் தூண்டிவிடும் கேடுதரும் வழிகளில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னை ஏதோ ஜெயலலிதா போல நினைத்துக் கொண்டு , ஈடுபடுவதை ஒரு போதும் யாராலும் பொறுத்துக் கொள்ளமுடியாது.
ஓய்வூதியம் தொடர்பாக கமிட்டி போட்டு- அதன் அறிக்கை மீதும், ஏழாவது சம்பள கமிஷன் முரண்பாடுகளைக் களைய 19.2.2017 அன்றே நியமிக்கப்பட்ட சித்திக் குழு தொடர்பாகவும் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கும், போராடுவோரை, அவர்களும் அரசு நிர்வாகத்தின் அங்கங்கள்தானே எனும் சிந்தனையோடு, முறைப்படி முதல்வர் அழைத்துப் பேச மறுப்பதும்தான் இந்தப் போராட்டத்திற்குக் காரணமே தவிர, அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ அல்ல.
தலைமைச் செயலாளரையே நீதிமன்றத்தில் ஆஜராக வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பரிசீலனை செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கி அனுப்பியும், தலைமைச் செயலாளர் அமைச்சர்களுடனும், முதலமைச்சருடனும் விழாக்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகிறாரே தவிர, தான் வகித்து வரும் பதவிப் பொறுப்பினை உணர்ந்து நிறைவேற்றுவதில் முழுவதும் தோல்வியடைந்து காணப்படுகிறார்.
ஆசிரியர் அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்ற கடமையை மறந்து மிரட்டினால் எல்லாம் பணிந்து விடுவார்கள் என்று தலைமைச் செயலாளரும், முதல்வரும் நினைப்பது நிர்வாக அவலட்சணங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. பந்து அடிக்க அடிக்க எழும் என்ற பாமரர்களுக்குத் தெரிந்திருக்கும் உண்மை.
ஆட்சியாளர்களுக்குத்தெரியாமல் இருப்பது பேரவலம்தான். அரசு ஊழியர்களுக்கு எல்லாம் நிர்வாக ரீதியாக தலைவராக இருக்கும் பொறுப்புள்ள தலைமைச் செயலாளர் ஒருவர், தன் பொறுப்பைத் துறந்து கீழிறங்கி வந்து, எச்சரிக்கை விடுவதில் மட்டும் கவனம் செலுத்துவது, அரசு நிர்வாகம் அதிமுக ஆட்சியில் எப்படி துருப்பிடித்து உதவாக்கரையாகி விட்டது என்பதற்கு ஊரறிந்த அடையாளமாக இருக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எஸ்மா, டெஸ்மா சட்டங்களை கொடூரமாக கொடுங்கோல் குணத்தோடு பயன்படுத்தி அரசு ஊழியர்களை எதிரிகளென எண்ணிப்பழி வாங்கியது போல், இப்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு, நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்வதும், போராடும் ஆசிரியர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி வேனிற்குள் வீசும் காட்சிகளும் காட்டு தர்பாரின் ஆட்சியன்றோ கோட்டையில் சாமரம் வீச கொலுவிருந்து கொண்டிருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது.
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை இழித்துப் பழித்த அதிமுக அரசு ஜெயலலிதா இருந்த போதே அழிந்து போனது என்பதை எடப்பாடி பழனிசாமி நினைவில் வைத்து- இது போன்ற விபரீத விளையாட்டுகளை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். அந்த விளையாட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதற்குச் சமம் என்ற பொது அறிவு வேண்டும்.
ஆகவே நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக விடுதலை செய்து, காவல்துறையை ஏவிவிட்டு கண்மூடித் தனமாக அராஜகத்தில் ஈடுபடுவதை அதிமுக அரசு உடனடியாக நிபந்தனையின்றி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அலட்சியமாக இருந்து, பதவி நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிவிட்டு, இப்போது தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கிறோம் என்று எதிர்மறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஊழியர்களிடையே வெறுப்பு-எதிர்ப்பு-பகை ஆகியவற்றை வளர்க்கத் தூபம் போடாமல், அவை அனைத்தையும் முற்றிலும் தவிர்த்து, போராடும் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும், கவுரவம் பார்க்காமல், உடனடியாக முதல்வர் நேரடியாக அழைத்துப் பரிவுடன் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், இந்தப் போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
- தினமணி வலை பக்கம்.
வெள்ளி, 25 ஜனவரி, 2019
ஆசிரியர் மன்றப் பொதுச்செயலாளர் பாவலர் க.மீ., அவர்கள் தொடர்ந்த வழக்கு எண் 1634 இன்படி இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி ஆசிரியர் பணிஇடத்தில் பணியமர்த்த சென்னை நீதிமன்றம் தடை விதித்துள்ளது...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை இன்று(25-1-19) விசாரணைக்கு வந்தது.
இன்று சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில் 2வது லிஸ்டில் 23வது வழக்காக நமது வழக்கு வழக்கு எண் 1634/2019 விசாரணைக்கு வந்தது.
அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது~சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
வேலை நிறுத்த நோட்டீசுக்கோ வேலை நிறுத்தத்திற்கோ நாங்கள் தடை விதிக்கவில்லை- நீதிபதிகள் விளக்கம்.
மொழிப்போர் தியாகிகளை நெஞ்சில் ஏற்றுவோம்...
மொழி காப்போம்;
இனம் காப்போம்; இனத்தின் உரிமை காப்போம்.
மாநிலம் காப்போம்.
மொழிப்போர் நாளில்
ஆசிரியர் இனத்தின் உரிமைக்கான போர்களத்தில் முன்னைவிடவும் வலுவாக
சமர் புரிவோம்!
சாக்டோ-சியோ பாதையில் பயணிப்போம்!
#நாம்வெல்வோம்
-முருகசெல்வராசன்
அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது!
அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யபடுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை, மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது
24/1/19 அன்று மாறுதல் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கபட்டது என்பது குறிபிடத்தக்கது..
இன்று சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில்
2வது லிஸ்டில்
23வது வழக்காக ,வழக்கு எண் 1634/2019 விசாரணைக்கு வருகிறது...
எங்கள் பணம் ரூ.50 ஆயிரம் கோடி எங்கே? தமிழகம் முழுவதும் ஆசிரியர், அரசு ஊழியர் எழுச்சி மறியல் - கைது...
நன்றி : தீக்கதிர் நாளிதழ்
சென்னை, ஜன.23-ஆசிரியர்-அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும் ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்று ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் வட்ட, ஊராட்சி, மாவட்ட தலைநகரங்களில் புதனன்று (ஜன. 23)சாலை மறியல் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக சென்னைமாநகராட்சி அருகே மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார் தலைமை யில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப் பாளர்கள் மு.அன்பரசு, அ.மாயவன், எஸ்.சங்கர்பெருமாள், ந.ரங்கராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ச.டேனியல் ஜெயசிங், வெங்கடேசன், சத்தியநாதன், ஜெ.பட்டாபி, அந்தோணி,சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சுந்தரம்மாள், அருணா (ஆசிரியர் சங்கம்), டெய்சி (ஐசிடிஎஸ்), சீனிவாசலு, சிவா (செங்கொடி சங்கம்) மற்றும் ஏராளமானஅனைத்துத் துறையைச் சேர்ந்த அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சிஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோரை காவல் துறையினர் கைது செய்தனர்.இதுகுறித்து மாநில ஒருங்கிணைப் பாளர் ந.ரங்கராஜன், மு.அன்பரசு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
3,500 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளோம். வாழ்வாதாரப் பிரச்சனையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறைதொடர வேண்டும், இதற்காக அமைக்கப்பட்ட குழுவினுடைய அறிக்கை வெறும் காகித அறிக்கை யாக இருந்து கொண்டிருக்கிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு 6ஆவது, 7ஆவது ஊதியக் குழுவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.15,000 அடிப்படை ஊதியத்தில் இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரி சித்திக் குழு வினுடைய அறிக்கையில் இந்த இழப்பீட்டை சரி செய்வதற்குரிய சாராம்சம் இல்லாமல் நீதிமன்றத்திலே ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை களிலுள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறக் கூடிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்படும் நிலையில், தற்போது இயற்றியுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண்56, 100, 101ஐ ரத்து செய்ய வேண்டும்.3,500 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்பதால் தொடக்கக் கல்வி நிர்வாகமே இல்லாதநிலையை ஏற்படுத்தும் முயற்சியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. எனவே பள்ளிகளை இணைக் கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
நிதிப் பற்றாக்குறை உண்மையா?
நிதிப்பற்றாக் குறை என அரசு கூறுகிறது. இதுவரை 6 லட்சத்து 12 ஆயிரம் பேர் செலுத்தியுள்ள தொகை 25 ஆயிரம் கோடி ரூபாய். அதைத்தான் கேட்கிறோம். அரசினுடைய பங்களிப்பு25 ஆயிரம் கோடி ரூபாய். அந்த பணம்எங்கே போனது? நிதித்துறை செய லாளர், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோரிடம் கேட்டால் இருக் கிறது என்று மட்டும் கூறுகிறார்கள். எங்கே இருக்கிறது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. 21 மாத நிலுவை 50 ஆயிரம் கோடி ரூபாய். 50 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே இருக்கிறது எனக் கூறத் தயாரா?2 விழுக்காடு ஊதியம் உயர்ந்தால் அரசுக்கு கூடுதல் செலவினம் எனக் கூறும் அரசு, எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்திய போது அரசுக்கு எவ்வளவு கூடுதல் செலவு என அறிவித்தீர்களா? எம்.எல்.ஏக்களின் ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கிய போது அதனால் அரசுக்கு இவ்வளவு கூடுதல் செலவு என தகவல் வெளியிட்டீர்களா? எனவே மேற்கண்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழை த்துப் பேசி தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.இடைநிலை ஆசிரியர்கள் 98 சதவிகிதம் இதற்கு ஒப்புக் கொண்டுள்ள தாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ஒருஇடைநிலை ஆசிரியர் கூட அந்த அரசாணையை பெற்று அங்கன்வாடி மையத்திற்கு செல்லவில்லை என்றனர். தேர்வு நேரத்தில் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுமே என்ற கேள்விக்கு, மாணவர்களின் நலன் கருதி விடுமுறைநாட்களில் கூட பாடம் நடத்தி முடிக்கப் பட்டிருக்கிறது. தேர்வு நேரத்தில் எங்களால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் சனி ஞாயிறுலும் வகுப்பு எடுக்க தயார் என்கின்றனர் ஆசிரியர்கள் .
அன்பானவர்களே!வணக்கம். 25.01.19 ஜாக்டோ-ஜியோ தமிழ்நாட்டில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்துகிறது...
25.01.19
தமிழகமெங்கும் மாவட்டத்தலைநகரில் மகத்தான மறியல் போராட்டத்தை நடத்துகிறது.
ஜாக்டோ-ஜியோ சொல்லி,
ஜாக்டோ-ஜியோ அழைத்து,
கோரிக்கைகளை மனதில் கொண்டு வேலைநிறுத்தத்திலும்,
மறியலிலும் பங்கேற்று இப்போரட்டத்தை வெற்றி முகம் நோக்கி முன்னேற்றப்பாதையில் வழி நடத்திவரும்
நாம் ,அந்த
ஜாக்டோ-ஜியோ சொல்லும் வரை,
அந்த கோரிக்கைகளுக்கு முடிவுகள் தெரியும் வரை
நான் பணிக்கு திரும்பமாட்டேன் என்று திடமான முடிவெடுத்து வேலைநிறுத்தத்தில் நில்லுங்கள்.
வேலைநிறுத்தத்தை ,மாவட்டமறியலை
வெற்றிகரமாக்குங்கள்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த
மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாள்ர்கள் ,மன்ற முன்னோடிகள்,
மன்றத்தின் ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்களே! நாமக்கல் நோக்கி மறியல் படை நடத்துங்கள்!
நாமக்கல் பூங்காச்சாலையை நிறைத்திடுங்கள்!
ஒன்பது அம்சக் கோரிக்கைகளுக்காக ஆசிரியர் மன்றத்தின் அனைத்து உறுப்பினரும் கைதாகி சிறை ஏகினர் என்று பாராட்டத்தக்க முடிவெடுத்து செயலாற்றுங்கள்.
#நாம்வெல்வோம்.
-முருகசெல்வராசன்
வியாழன், 24 ஜனவரி, 2019
ஜாட்டோ ஜியோ வின் இன்றைய போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு...
இன்று(24-01-2019) வியாழன் வட்ட அளவில் ஜாக்டோ-ஜியோ நடத்த இருந்த மறியல் போராட்டம் மாவட்ட அளவில் மறியல் போராட்டமாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
~மாநிலஒருங்கிணைப்பாளர்கள்,
ஜாக்டோ-ஜியோ.
அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்~ வை.கோ…
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ - ஜியோ) சார்பில் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தி நடத்தி வருவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மழலையர் பள்ளிகளில் சரியான முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்...
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தின்படி, முதற்கட்டமாக 2381 மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும், இப்பள்ளிகளில் பாடம் கற்பிக்க சரியான ஆசிரியர்கள் நியமிக்கப் படாததால், அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் எதற்காக தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போகும் ஆபத்து உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடத்தை மட்டும் கற்பித்தால் போதுமானது.
ஆனால், மழலையர் வகுப்புகளை அதுபோன்று கையாண்டு விட முடியாது. மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி கல்வி முறையில் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசும் இதை ஒப்புக்கொண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி முறையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
வகுப்பறையில் ஒரு குழந்தை தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். தூங்க நினைத்தால் தூங்கலாம். இதுதான் மாண்டிசோரி முறையிலான கல்வியாகும். இந்த தத்துவங்களின் அடிப்படையில் குழந்தைகளை கையாள்வது இடைநிலை ஆசிரியர்களால் சாத்தியமல்ல. மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் தான் இது சாத்தியமாகும்.
எனவே, மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வகையில், அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாண்டிசோரி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
புதன், 23 ஜனவரி, 2019
அன்பானவர்களே! வணக்கம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த பொறுப்பாளர்களுக்கு என் வேண்டுகோள்...
*தொடக்கக்கல்வித்
துறையில் வேலைநிறுத்தத்தை வலுப்படுத்துங்கள்.
*பள்ளிக்கல்வித்துறையில் தீவிரப்படுத்துங்கள்.
* அரசுத்துறையின் பல்வேறு அலுவலகங்களில் கவனம் செலுத்துங்கள்.
*தேவையின் அடிப்படையில், காலத்தின் கட்டளையை ஏற்றுக்கொண்டு் கூட்டுப்பரப்புரைக்கும்,குழுச்செயல்பாடுகளுக்கும் முன்னுரிமை தந்து கடைமையாற்றுங்கள்.
*வெற்றிமுகம் நோக்கி பயணம் தொடருங்கள்.
*போராட்டக்களத்தில் வெஞ்சினத்தோடு சமர்புரியும் மன்றத்தின் மறவர்,மறத்தியர் அனைவரையும் மாவட்ட அமைப்பு பாராட்டுகிறது;
வாழ்த்துகிறது.
~முருகசெல்வராசன்.
💐🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர். திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மைய எல்கேசி,யூகேசி., வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு 23.01.19அன்று விசாரிக்கப்படுகிறது.
*23/1/19 வழக்கு விசாரணை.
*தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
பொதுச்செயலாளர்
பாவலர்
க. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தொடுத்த வழக்கு 23.01.19அன்று விசாரணைக்கு வருகிறது.
*அங்கன்வாடிக்கு
இடைநிலை
ஆசிரியர்களை
மாறுதல் வழங்குவதற்கு
தடைகோரிய வழக்கு
சென்னை உயர்நீதிமன்றம் 38 வதுகோர்ட்டில் 13 ஆவது வழக்காக விசாரனைக்கு வருகிறது.
*ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திரு. ஜி.சங்கரன் அவர்கள் இவ்வழக்கில் வாதங்களை முன்வைக்கிறார்.
ஜாக்டோ-ஜியோ அழைக்கிறது...
@ஆகஸ்ட் 5-ல் சென்னைப் பேரணி.
@ஆகஸ்ட் 22 இல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்.
@செப்.7 முதல் தொடர் வேலைநிறுத்தம்.
@நீதிமன்றத்தில் தலைமைச்செயலாளர்.
@இதன் விளைவாகவே தமிழக அரசு 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தியது.
@இப்போது நாம் மாதம்மாதம் பெறும் ஊதியம் இந்தப் போராட்டங்களினால்,ஜாக்டோ-ஜியோவால் வந்ததே, கிடைத்ததே.
@இன்று போர்க்களம் புகுந்திடுங்கள்.
போராளியாக நின்றிடுங்கள். வரலாறு போற்றும். வரும் தலைமுறை வாழ்த்தும். நம் வாழ்க்கைத் தரமுயரும்.
*வாருங்கள், வெல்லலாம்*
அன்போடு அழைக்கிறது...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்.
செவ்வாய், 22 ஜனவரி, 2019
அன்பானவர்களே!வணக்கம்! எருமப்பட்டி ஒன்றியத்தின் தலைமையாசிரியர் பெருமக்களே!ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்களே! தங்களுக்கு என் வேண்டுகோள்:-
ஜாக்டோ-ஜியோ வின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிப்பெறச்செய்யுங்கள்.
கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து மன்னித்துவிடுங்கள்.
எதிர்கால ஆபத்துக்களை,
அபாயங்களை ,
பாதிப்புகளை ,
சேதாரங்களை கணக்கிலும்,
கவனத்திலும் கொள்ளுங்கள்.
ஆசிரியர் சமுதாயத்தின் கண்ணியத்திற்கும்,தன்மானத்திற்கும் கேடு சூழ்கிறது.
58வயது முடிய ஆசிரியர் பணி என்பது கேள்விக்குறியாகிறது.
மதிப்பான, கெளரவமான ஆசிரியப்பணி ஓய்வு என்பது கனவாகிவிடுமோ!?எனும் அச்சம் எழுகிறது. இதோ,அவைகளில் ஒருசில...
*பள்ளிகள் இணைப்பு தலைமையாசிரியர் பணியை,பதவியை காலிசெய்கிறது.
*எல்கேசி.,யூகேசிக்கு ,வலுகட்டாயமாக இடைநிலை ஆசிரியரை நியமிப்பது தகுதி நிலை இறக்கமாகிறது.
*நடுநிலைப்பள்ளிகளில் 2+1 எனும் நிர்ணயம் பணி இழப்பை அதிகமாக்குகிறது.
*3500தொடக்கப்பள்ளிகள் மூடுதல் ஆசிரியர்களை பணி இழக்கச்செய்கிறது.ஏழை,எளிய மக்களுக்கு கல்வி மறுப்பை உருவாக்குகிறது.
*5000பள்ளிகள் இணைப்பு என்பது தொடக்கக்கல்வித்துறையையே அழிக்கிறது.வட்டாரக்கல்வி அலுவலர் பணிமாற்றம் வாய்ப்பைப்பறிக்கிறது.வணிகமயக்கல வியை,தனியார்மயக்கல்வியை வளர்க்கச்செய்கிறது.
*பொதுக்கல்விமுறைக்கும்,இலவசதாய்மொழிவழிக்கல்விக்கும் , அரசுப்பள்ளிக்கும் பெரும் அச்சுறுத்தல் ,ஆபத்து விளைந்துள்ளது.
*இத்தகு பல்வேறு வகை ஆபத்திலிருந்து நம்மை,
நம் ஆசிரியர் இனத்தை,
தமிழ்நாட்டுக்கல்வியை ,
அரசுப்பள்ளிகளை பாதுக்காத்துக்கொள்ள நம்முன் உள்ள ஒரேவழி ,
ஒரே மருந்து ஜாக்டோ-ஜியோ வின்
2019 சனவரி 22 ஆம்நாள் முதலான காலவரையற்ற வேலைநிறுத்தமே !
எனவே,எத்தகு தயக்கமும்,
அவநம்பிக்கையும் கொள்ளாமல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று வாழ்வை வெற்றிகரமாக்கிக்கொள்ளுங்கள்!
போராட்டக்களத்தில் ஆசிரியப்போராளியாக, எல்லோருக்கும் நன்மை செய்பவராக செயல்படும் முடிவெடுங்கள்! செயலாற்றுங்கள்!
நன்றி.
-முருகசெல்வராசன்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 7அம்சக் கோரிக்கைகள்~ திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலரிடம் பெருந்திரள் முறையீடு...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் 7 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3 கட்ட தொடர்போராட்டங்களை நடத்த உள்ளது.
அதில் முதல்கட்டமாக 21.1.2019 பிற்பகல் 5 மணிக்கு திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக அலுவலர் அவர்களை சந்தித்து பெருந்திரள் முறையீடு.இச்சந்திப்பில் மாநில மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)